உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகநானூறு - 2

49


'மைப்பருப்புழுக்கி னெய்க்கணி வெண்சோறு

வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்த் திணிய வாகத் தெள்ளொளி அங்க ரிைருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணே யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணு மிமையார் நோக்குபு மறைய மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலே பழங்கன்று கறித்த பயம்பம லறுகைத் தழங்கு குரல் வானின் றலைப்பெயத் கீன்ற மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத் தண்னது முகையொடு வெண் ணுால் சூட்டித் துரவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மவி பந்தர் இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித் தமர்நமக் கீத்த தலைநா விரவின்.'

(அகம்-138).

இவ்விருவகைத் திருமணங்களிலும் இக்காலத் திரும்னச் சடங்குகள் இடம் பெருமையைக் காண்க. மண்மகளை வாழ்வரசியர் வாழ்த்தி மணநீராட்டு தலும் சுற்றத்தார் பெண்ணைக் கணவளுேடு சேர்ப் பித்தலுமே சிறந்த சடங்குகளாகக் கருதப்பட்டன . என்பது தெளிவு. "கற்பு நெறியினின்றும் வழுவா மல் கணவன் உள்ளங்கவர்ந்த காரிகை ஆகுவாய்," என்று வாழ்வரசியரால் கற்பிக்கப்பட்டதிர்ல் மண மகள் கற்புடையவள் ஆயினுள். அங்ங்ணம் கற்பிக் கப்பட்டபடி நடந்தவள் கற்புடை மனைவி எனப் t-ll-L-fFGIT

திருமணத்திற்கு இன்றியமையாதது, பலரறிய இருதிறத்துப் பெற்ருேரும் மணமக்களை ஒன்று படுத்தலே ஆகும். இன்னவர் மகள் இன்னவர் மகனை மணந்து கொண்டாள் என்பதை அறியச் செய்வதே திருமணத்தின் சிறப்பு நிகழ்ச்சியாகும். முன்னரே வாழ்வரசியராக இருக்கும் பெண்கள்