உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. புலவர் பெருந்தகை

சங்க காலப் புலவர்

சங்க காலப் புலவர்கள் சிறந்த கல்விமான்கள்; அதே சமயத்தில் வறுமையால் வாட்டமுற்றவர்கள்; ஆயினும் வணங்கா முடியினர்; தவறு செய்பவன் அரசனுயினும் வலிந்து சென்று கண்டிக்கும் இயல் புடையவர்; பிறர் துயர் காணுப் பெற்றியினர்; தாமே சென்று அத்துயர் களையும் மனப்பண்புநிறைந்தவர். அரசரிருவர் போர் செய்யுங்காலை அவரிடம் சென்று இரு நாடுகளுக்கும் ஏற்படும் இன்னல்களை எடுத் துரைத்துப் போர் நிறுத்தம் செய்யும் புகழ்மிக்க மன வலி படைத்தவர். இங்ங்ணம் தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த சங்க காலப் புலவர்களில் தலை சிறந்த பெரியார் கோவூர் கிழார் என்பவர்.

நலங்கிள்ளி-நெடுங்கிள்ளி-போர்

சோழப் பெருவீரனை கரிகால் வளவனுக்குப் பின்பு அரசு கட்டில் ஏறிய நளங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளி என்னும் அவன் பங்காளிக்கும் சோழ நாட்டில் போர் மூண்டது. இருதிறத்தாரும் தத்தம் படைகளை முடுக்கிப் போரிட்டனர். உறையூர் ஆண்டுவந்த நெடுங்கிள்ளி நளங்கிளிக்குத் தோற். றுக் கோட்டையுள் ஒளிந்துகொண்டான். நலங் கிள்ளி அவனை விடாமற் சென்று உறையூர்க் கோட். டையை முற்றுகை யிட்டான். முற்றுகை பன்னுள் நீடித்தது. கோட்டையுள் இருந்த மக்கள் வெளியி லிருந்து பொருள்கள் வாராமையால் துன்புற்றனர்; வழக்கம்போல் கோட்டைக்கு வெளியே வந்து ப்ோகும் வாய்ப்பிழந்து வருந்தினர். கோட்டைக்கு வெளியிலிருந்த மக்களும் நலங்கிள்ளி படையினரால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/52&oldid=640734" இலிருந்து மீள்விக்கப்பட்டது