52
இலக்கிய அமுதம்
துன்புற்றனர்; தம் உரிமையோடு பல இடங்களில் நடமாட இயலாமல் வருந்தினர்.
புலவர் வருகை
இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது. அருள் உளம் கொண்ட அப்புலவர் போர்க்களத்தரு கில் விரைந்து வந்தார். போரில்ை இருதிறத்து மக்களும், மாக்களும் படும் துன்பங்களைக் கண்டு அவர் மனம் நெகிழ்ந்தது. தமிழ் நாட்டு மூவேந்தர் களும் தமிழ் வேந்தரென்னும் ஒரு குடியிற் பிறந்தவர் களே. அவ்வாறிருந்தும் அம் மூவரும் தம்முள் இருந்த மாறுபட்டால் பல போர்கள் நிகழ்த்தி நாட்டை அவல நிலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்த செயல் முன்னரே புலவர் நெஞ்சை வருத்தியது. இங்கு நடைபெறுகின்ற போரோ ஒரே சோழர் குடியில் தோன்றிய இரு மன்னரால் நடைபெறுவ தன்ருே? பகைவர் இருவர் போர்செய்வது இயல்பு. ஒரு குடிப்பிறந்தோர் இவ்வாறு போரிட்டு நாட்டை யும், நாட்டு மக்களையும் அழிக்கும் செயல் கண்டு ஒருபுறம் வியப்பும் ஒருபுறம் இரக்கமும், ஒருபுறம் இகழ்வும் புலவர் நெஞ்சில் எழுந்தன.
புலவர் அறிவுரை
புலவர், போரிடும் மன்னரிருவர் இடையிலும் சென்று நின்ருர். "சோணுட்டுப் பெருவேந்தர்களே! நிறுத்துங்கள் போரினை. உங்கள் முன்னுேருட் சிறந்தவர் தமிழ் நாட்டுக்கும் அப்பாலுள்ள பிற நாடுகளை வென்று வாகை சூடிப் புகழ் பெற்ருர்கள். உங்கள் முன்ளுேரில் பின்னேர் சிலர் பிற நாடுகளை வெல்லும் ஆற்றலின்றிச் சேர பாண்டியரையாவது வென்று விள்ங்கினர். நீங்களோ அத்துணையும் ஆற்றலின்றி உங்களுள்ளேயே போரிட்டு வெற்றி கிர்ண விழைந்தீர் போலும் மிக நன்று உங்கள் செயல்! உங்களுடன் எதிர் நின்று பொருபவன் பனைமாலை யணிந்திருக்க வில்லையே! பனை மாலை