பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் பெருந்தகை

53


யணிந்த சேரனுடன் போர் உடற்றி வென்றி யெய்துவீராயின் அச் செயல் பாராட்டுதற்குரிய தாகுமே; அல்லது வேப்பந் தாரையணிந்த பாண்டி யணுகவும் தோற்ற வில்லையே; எதிர்த்து நின்ற இரு விரும் ஆத்தி மாலையை யல்லவா அணிந்திருக்கிறீர் கள். ஒரே சோழர் குடியில் தோன்றியவர்களல்லவா நீங்கள்? அயல் நாட்டு மன்னரை வென்றி கொண்டி ரில்லை; அன்றி உள்நாட்டுச் சேர பாண்டியருடனும் போர் செய்து வெற்றி எய்த நினைந்திவீர். ஒரு நாட்டு மன்னராகிய உங்களுள்ளேயே போரிட உறுதி கொண்டீர் போலும் உங்களில் ஒருவர் எப்படியும் தோற்பது உறுதி; இருவரும் வென்றி யெய்துதல் எங்கும் காணுத செயல். உங்களில் யார் தோற்பினும் சோழர் கு டி தோற்ருெழிந்தது என்றல்லவா உலகம் பழிக்கும் ? நீங்கள் பிறந்த குடிக்குப் புகழ் தேடாதொழியினும் பழியையாவது தேடாதிருத்தல் கூடாதா? இச் செயல் நும் சோழர் குடிக்கே பெரும் பழி விளைப்பதன்ருே? தம் குடியைத் தாமே அழித்து, தம் குடிக்குத் தாமே பழிதேடி மகிழ நினைக்கும் உங்கள் இருவர் செயலும் மிகமிக நன்று! நீங்கள் செய்யும் இவ்வதிசயப் போர் பிற நாட்டு மன்னர்களுக்கு விட் நகைப்பை யன்ருே விளைவிக் கும்,” என்று உள்ள முருகக் கூறினர். ‘.

செல்லுஞ் சொல் வல்லராகிய கோவூர் கிழாரின் அறிவுரை கேட்ட இருபெரு வேந்தர் மனமும் நாணின; தங்கள் இழி செயலுக்கு வருந்தித் தலை யிறைஞ்சிப் புலவர் பெருமானை வணங்கினர். புல வரும், தம் குற்றத்தை யுணர்ந்து வருந்திய மன்னர் களை நோக்கி, "புவிபுரக்கும் மன்னர் பெருமக்களே! கழிந்ததற் கிரங்காமல், இனியேனும் நீங்கள் ஒன்று பட்டு வாழ்வதுடன், தமிழ் நாட்டுப் பிற மன்னருட லும் சேர்ந்து பகையின்றி நெடிது வாழுங்கள்," என வாழ்த்திப் போரை நிறுத்தி ஏகினர்.

4