உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இலக்கிய அமுதம்


2

கோவூர் கிழாரது பெருந்தன்மையை விளககப் பிறிதொரு சான்றும் காணலாம். மேற்கூறப்பெற்ற நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் உ ைற யூ ர் முற்றுகையில் ஈடுபட்டிருந்தகாலை, கோவூர் கிழார் அங்குத் தோன்றி முற்றுகையால் உண்டான துன்ப நிலையைக் கண்டு மனம் வருந்திக்கொண்டிருந்த பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இளந்தத்தன் . . .

சங்க காலப் புலவர் மெருமக்கள் "திருவேறு தெள்ளிய ராதலும் வேறு" என்னும் இலக்கணத். திற்கு ஓர் இலக்கியமாக விளங்கினர். அறிவும். வறுமையும் ஒன்றுபட்டுக் கைகோத்துச் சென்று புலவர் வாழவில் பங்கு கொண்டன. ஆயினும் பெருந்தன்மையையே அணிகலனுகக் கொண்ட அப்பெரு மக்கள் 'பழுமரந்தேரும் பறவைபோல” வள்ளலை நாடி வளம் பெற்று வறுமை யொழிவர், வாங்கி வந்த வளமனத்தையும் வைத்தினிது வாழா மல், ஏங்கிக் கிடக்கும் ஏழை பலர்க்கும் வாரி வழங் கும் வள்ளல் தொழிலில் இறங்கிப் பின்னும் வறுமை யில் இறங்குவர். இங்ங்ண்ம் நாடாறு திங்க்ளும் காடாறு திங்களும் வாழ்ந்த பிற்கால விக்கிரமாதித் தனைப் போலவே முற்காலப் புலவர்கள் சில காலம் வள்ளலாகவும் சிலகாலம் வறியராகவும் மாறி மாறி வாழ்ந்து வரலாயினர். இவ்வாறு வாழ்வு நடாத்திய புலவர் பெருமக்களுள் இளந்தத்தரும் ஒருவராவர். நலங்கிள்ளிபால் இளந்தத்தர்

சோழன் நலங்கிள்ளி புவிமன்னனுகவும் கவி' மன்னனுகவும் விளங்கியவன்; கல்வியும் ஒழுக்கமும். 'ஒருங்கு வாய்க்கப் பெற்றவன்.

'தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்விருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே