பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் பெருந்தகை

55


என்று அவ்வேந்தன் பாடும் வஞ்சினப் பாட்டு அவன் புறப் பகைவரை வென்றி கொள்ளும் போராண்மையினையும் காமம் என்னும் அகப்பகை வனை வென்றி கொள்ளும் பிறர் மனைவிழையாப் பேராண்மையினையும் ஒருங்கு காட்டு மன்ருே? ஒழுக்கமும் கல்வியும் உயி ரு ம் உடம்புமாகக் கொண்ட இப்பெரு வேந்தன், அத்தகையினராகிய புலவர் பெருமக்களுக்கு வாரி வழங்கும் வள்ளன்மை புடையணுகவும் விளங்கினுன் என்பது கூறவும் வேண்டுமோ இம்மன்னன் புகழைக் கேள்வியுற்ற புலவர் இளந்தத்தர் அவனைக் கண்டு பாடிப் பரிசு பெறும் வேட்கை மிகுந்தார்; நலங்கிள்ளி அரசு புரியும் புகாரை நோக்கி விரைந்தார்; புகாருள் புகுந் தார்; வளவன் கோயிலை வந்தடைந்தார். நல்ங். கிள்ளியைக் காணுமல் வருந்தினர்; நெடுங்கிள்ளி யின் உறையூரை முற்றுகையிட்டு, ஆண்டு அவன் படையுடன் உறைகின்ருன் என்பதை அறிந்தார்; போர்க்களத்தில் சென்ரு பரிசு கேட்பது' எனப் புலவர் மனம் வாடியது; எனினும், புலவர்தம் வறுமை பின்னிருந்து தள்ள, மன்னனின் பண்பு நலம் முன்னிருந்து இழுக்க, உறையூர்க்கு விரைந் தார் இளந்தத்தர் உறையூர் முற்றிய நல்ாங்கிள் எளியை முற்றுகையிட்டார் தத்தர்; புகார் வேந்தன் பால் தம் வறுமையைப்பற்றி அமைதியுடன் இனிது எடுத்தியம்பினர். போரிலேயே ஊக்கம் செலுத்திய நலங்கிள்ளியின் மனம் புலவர் பக்கம் திரும்பியது. புலவர்தம் ஒட்டிய கன்னமும் கட்டிய கந்தையும், நரைத்த தலையும் திரைத்த உடலும் வாடிய மேனியும் பாடிய வாயும் கிள்ளியின் உள் ளத்தை உருக்கின. 'புகாரை அமைதியுடன் அரசு புரிந்த அந்த நாள் வந்திலீர்! அருங்கவிப் புலவீர்! உறையூர் முற்றிய இந்த நாள் வந்தெனை நொந்து நீர் எய்தினர். பெரும் பரிசு தரும் பேற்றினை யான் பெற்றேனில்லையே?’ என வருந்தி, இயன்ற பரிசிலை இனிது நல்கிப் பு ல வ ைர மகிழ்வித்தான் நலங்கிள்ளி.