பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அகப்பொருள்

பொருள் இலக்கணம்

உலகத்திலுள்ள ஒவ்வொரு மொழியிலும் இலக்கண நூல்கள் உண்டு. எனினும் அவை மொழி இலக்கணத்தையே எடுத்தோதுவனவாகும். ஆயின் தமிழ் இலக்கணம் தமிழ் மொழியின் இலக் கண்த்தையும் அம்ம்ொழியினைப் பேசும் மக்களது வாழ்க்கையின் இலக்கணத்தையும் எடுத்துக் கூறு தல் வியத்தற் ப்ர்லது. இத்தகைய தனிச்சிறப்புத் தமிழ்மொழி ஒன்றுக்கே உண்டு. இஃதெரன்றே தமிழரது நாத்ரிகம், உலக மக்களின் தனிப்புட்டி நாகரிகத்தைவிட மிகச் சிறந்தது என்பதற்குப் போதிய சான்ருகும். வாழ்க்கையின் இலக்கணம் அது இலக்கணம், புற இலக்கணம் என இருவகைப் படும். ஒருவனும், ஒருத்தியும் கூடி வாழ்கின்ற வாழ்க்கையின் விவரங்களை விரித்துக் கூறுதல் அகப்பொருள் இலக்கணமாகும். அஃதாவது, இன் பப் பகுதியே அக்ப் பொருளாகும். அறம், பொருள், வீடு என்னும் மூன்று பேறுகளைப் பற்றிய செய்தி களைக் கூறும் இல்க்கணம் புறப்பொருள் இலக்கணம் எனப்படும். அஃதாவது, ஒருவனது வாழ்க்கையின் இன்பப் பகுதி நீங்கலாக உள்ள ஏனைய செய்திகள் புறப்பொருள் என்று தொல்லாசிரியரால் கொள்ளப் பட்டன. ஆகவே, பண்டைத் தமிழர் பாங்குற வகுத்த அகம், புறம் என்ற இரண்டனுள் வடமொழி யாளர் வகுத்துக் கூறும் பேறுகள் நான்கும் (அறம், பொருள், இன்பம், வீடு) அடங்குதல் காண்க.

வாழ்க்கையின் உயிர் நாடி

மனிதப் பேறுகள் நான்கனுள் அகப்பொரு ளென்னும் இன்ப்ப் பகுதியே விழ்க்கையின் உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/59&oldid=640741" இலிருந்து மீள்விக்கப்பட்டது