பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய அமுதம்

1. தமிழக வரலாறு

அரசியல் வரலாறு

இன்றுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்கள், பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், மணிமே கலை என்பன சங்க நூல்கள் என்று பெயர் பெறும். இவையாவும் ஏறத்தாழக் கி. பி. 300-க்கு முற்பட் ட்வை. இந்நூல்களில் உள்ள செய்திகள் எல்லாம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆட்சியையே குறிக்கின்றன. இம்முடி யுடைய மூவேந்தர் நெடுநில மன்னரென்றும், இவர்க்கு அடங்கியும் அடங்காமலும் இருந்த பாரி, பேகன் முதலியோர் குறுநில மன்னர் என்றும் பெயர் பெற்றிருந்தனர். சங்க காலத்தில் தமிழகத்து மன் னிரிடையே பலபோர்கள் நடந்தன. ஒரு காலத் தில் சோழன் பேரரசனுய் விளங்கின்ை ; வேருெரு காலத்தில் பாண்டியன் பேரரசய்ை விளக்கமுற்ருன்; பிறிதொரு சமயம் சேரன் பேரரசனுய்த் திகழ்ந்தான். கரிகாற் சோழன் இமயம்வரை சென்று இமயத்தில் புலிப் பொறி பதித்து மீண்டான். இவ்வாறே வட நாடு சென்று நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன்' எனப் பெயர்பெற்ருன். பாண்டியன் நெடுஞ்செழி யன் ஆரியர்களை வென்று, 'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று புகழ் பெற்ருன்.

கி. பி. 300 முதல் 900 வரை தமிழகத்தின் பெரும்பகுதி பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சி யில் இருந்தது. சோழர் சிற்றரசர் ஆயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/6&oldid=640667" இலிருந்து மீள்விக்கப்பட்டது