அகப்பொருள்
59
நாடியாக விளங்குவது. மனிதன் இன்பம் பற்றியே பொருளைத் தேடுகிருன். பொருள் கொண்டு அறஞ் செய்கிருன். இம் முப்பேறுகளும் செம்மையுறச் செய்பவன் நான்காம் பேற்றை இயல்பாகவே அடைவான். இதனுற்ருன் பண்டைத் தமிழர் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையுமே வாழ்க்கையின் உயிர்நாடியாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பது ச ங் க ப் பழம் பாடல்களால் அறியக் கிடக்கிறது. தொல்காப்பியர்க்கு முற்பட்ட தொல்லாசிரியர்கள் வகுத்த அகம், புறம் என்னும் இரண்டு பதிகுகளையும் தழுவி, தம் காலத்திய மாறு தல்களையும் உள்ளடக்கித் தொல்காப்பியர் எழுதி யுள்ள பொருள் இலக்கணம் ஒன்றே இன்றுள்ள திறந்த ஆதார இலக்கண நூலாகும். அதனை இலக்கணமாகவும் அகநானூறு, நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு முதலியவற்றையும், திருக் கோவையார் முதலியவற்றையும் இலக்கியமாகவும் கொண்டு ஆராயின், பழந் தமிழ்ப் பெருமக்கள் பகுத்தறிவேர்டு அமைத்த அகப் பொருளென்னும் அழகிய இன்ப மாளிகையைக் கண்டு களிக்கலாம். இவற்றுடன் சைவ சமய ஆசிரியர்கள் பாடியருளிய திருமுறைகளையும் ஆழ்வார்கள் பாடியருளிய அருட்பாடல்களையும் பக்கத்தில் வைத்து உணர்ச்சியோடு படிக்கப் படிக்க, அப்பக்த சிகாமணிகள் அகப் பொருள் இலக்கணத்தைத் தமது பக்தி நெறிக்கே உயிர் நாடியாகக் கொண்டிருந்தனர் என்பது தெள்ளிதில் உணரலாம்.
அகப்பொருள் இலக்கணம்
இவ்வகப்பொருள் இலக்கணத்தை ஆராய்வதால் பண்டைத் தமிழ் மக்கள் மணம் செய்து கொள் ளும் முறைமை, அவர்தம் காதல் வாழ்க்கை, தலைவன் தலைவியரது இன்பத்திற்கு உதவும் பாங்கன் பாங்கியர், களவுப் புணர்ச்சியில் தலைவியும் தோழியும் தலைவனைச் சோதிக்கும் முறைகள், தனக்கு உண்டா