60
இலக்கிய அமுதம்
கும் பல இடுக்கண்களைப் பொருட்படுத்தாமல் தலை வியை அடைவதில் தலைவன் கொள்ளும் முயற்சி, களவு, வெளிப்பட்டபின் இரு திறத்துப் பெற்ருேரும் நடந்துகொள்ளும் முற்ைமை, பெற்ருேர் உடன் படாதபோது தோழி தலைவியைத் தலைவளுேடு கூட்டியனுப்புதலும் அங்ங்னம் அனுப்பும்போது அவள் தலைவனிடம் கூறும் வாழ்க்கைக்கு இன்றிய மையாத உபதேசமும், காதலர்க்குள் ஏற்பட்ட களவைத் தோழி தாய்மார்க்குக் குறிப்பாக உணர்த் தும் திறமையையும் இன்ன பிறவும் நாம் அறிந்து மகிழலாம். -
களவொழுக்கம்
இனி இவை பற்றிய செய்தியைக் காண்போம்:
ஓர் இளைஞன் (தலைவன்) பூம்பொழில் ஒன்றில் தனித்துப் பூக் கொய்யும் நங்கை (தலைவி) ஒருத்தி யைக் காண்கிருன். இருவரும் ஒருவரை யொருவர் நோக்குகின்றனர். இருவர் விழிகளும் சந்திக்கின் றன. இருவரும் மாறி இதயம் புகுகின்றனர். அவ்வமயம் உள்ளத்துத் தோன்றும் இன்ப உணர்ச் சியே அவ்விருவர் பிற்காலக் காதல் வாழ்க்கைக்கு. அடிப்படையாக அமைகின்றது. பார்வை ஒன்ற, உள்ளம் ஒன்ற, உணர்ச்சி ஒன்ற அவ்விருவரும் ஒருயிர் ஈருடல் ஆகின்றனர். அவ்வின்புப் பூங்கா வில் உள்ள நறுமணமுள்ள மலர்களிளிடையே நங்கை-நம்பி ஆகிய இருவர்தம் காதல் அரும்பும் போதாகி மலர்ந்து மணம் வீசுகின்றது. அம்மட்டோ!. தேனும் பிலிற்றுகின்றது. காதல் மணமும் காதல். தேனும் அப் பூங்காவைப் பொன்னுலகமாக்கு. கின்றன. அன்று முதல் அவர்தம் காதல் வாழ்க்கை களவிலேயே நடந்துவருகின்றது.
எனினும் நீடித்த களவு வாழ்க்கைக்குத் தோழி: யும் தோழனும் உதவி செய்யும் பாத் தி ரங்க ளா க. அமைகின்றனர். தோழி தலைவனது காதலைப் பரி: