உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

61


சோதிக்கும் திறம் மிக வியந்து பாராட்டத்தக்கது. தலைவியைத் தலைவன் பெறமுடியாது என்பதற்குப் பல நியாயங்களைத் தோழி கூறுகிருள். அவளைத் தான் பெருவிடில் மடல் ஏறுவதாகத் தலைவன் சூள்

உரைக்கிருன். இங்ங்னம் பலவாறு மு த ற் க ண்

அவனது உள்ளத்தைச் சோதித்த தோழி, அவனுேடு: தலைவியைக் கூட்டுகிருள்: அக்கட்டம் நடைபெறும் பொழுதே மீண்டும் அவனைச் சோதிக்கக் கருதி, பக

லில் வருகின்றவனை இரவில் வரும்படியும், இரவில்

வருகின்றவனைப் பகலில் வருமாறும் மாறி மாறி வரச்

செய்து அவனுக்குத் துன்பத்தைத் தருகின்ருள்.

"தலைவி வீட்டில் அடைக்கப்பட்டாள்; ஆதலின்

அவளைப் பெற நள்ளிரவில் வருக” என்பாள். தலை

வனும் அவள் சொற்படி நடப்பான். தோழி மீண்

டும், " நீ வரும்பொழுது நாய் குரைக்கிறது; காவ

லர் திருடன் என்றெண்ணித் தேடுகின்றனர். ஊர் விழித்துக் கொள்கிறது' என்றெல்லாம் கூறி அவ

னைத் துன்புறுத்துகின்ருள். தலைவன் இத்துணைச்

சோதனைகட்கும் உட்பட்டு அவள் சொற்ப்டி நடந்து, தான். தலைவிமீது கொண்ட களங்கமற்ற காதலின் உறுதியை வெளிப்படுத்துகிருன்.

அறத்தொடு நிற்றல்

களவுப்புணர்ச்சியால் தலைவியின் வேறுபாடு: கண்ட தாய்மார் தோழியை வினவுவர். தோழி' களவை வெளிப்படக் கூருமற் கூறும் திறன் அறிந்து வியற்கற்பாலது : (1) தலைவியும் நாங்களும் சுனையில் நீராடுகையில் தலைவி கால் தவறிச் சுனை யில் வீழ்ந்துவிட்டாள். நாங்கள் அலறிளுேம். அவ் வமயம் கட்டழகுள்ள இளைஞன் ஒருவன் அங்குத் தோன்றினன்; சரேல்ென நீரிற் குதித்தான்; தலை வியை அனைத்துக் கொண்டு சு னை யி னி ன் று ம் வெளிப் போந்தான். தன் உயிரைக் காத்த அவ். வண்ணல்பால் தலைவி உள்ளம் நெகிழ்ந்தாள். (2) தலைவியும் யாங்களும் பூப்பறிக்குங்க்ால் தலைவி!