64
இலக்கிய அமுதம்
நாயன்மார் வரலாறுகளில் அவர்கள் செய்த
தலயாத்திரை பற்றிய விவரங்களைக் குறிக்க வேண் டிய தேவை ஏற்பட்டது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்
என்பவர் முறையாகச் சென்ற தலங்களையும் அங்குப்
பாடிய பதிகங்களையும் முறைப்படுத்த வேண்டிய வேலை சேக்கிழாரைச் சார்ந்தது. இது மிகவும் கடின மான செயல். சேக்கிழார் ஒவ்வொரு பாடல் பெற்ற தலத்தையும் நேரில் சென்று கண்டார்; தமிழகத்து ஆறுகளைப் பார்த்தார்; இன்ன ற்றின் வடகரை யில் இன்னின்ன பெயருடைய கோவில்கள் இருக் கின்றன என்பதை அறிந்தார்; நாயன்மார் வாழ்ந்து மறைந்த ஊர்களில் உள்ள சிவன் கோவில்களைப்
பார்வையிட்டார்; கோபுரம் உடைய கோவில் இது,
வாயில் மட்டும் உடைய கோவில் இது என்னும் விவரத்தை அறிந்தார்; நாயன்மாரின், செப்புத்திரு மேனிகளைப் பார்வையிட்டார்; சைவத் திருமுறை களைக் கொண்டு சைவசித்தாந்த உண்மைகளை அறிந்தார்; இவை அனைத்திற்கும் மேலாக, நாயன் மார் பற்றிய விவரங்களை அறிவிக்கும் தம் காலத்தி லிருந்த கல்வெட்டுக்களையும், செப்புப்பட்டயங்களை யும் நன்ருக ஆராய்ந்தார். இத்துணை மூலங்களை
யும் கொண்டுதிர்ன் திருத்தொண்டர் புராணம் என்
னும் பெரிய புராணத்தைச் சேக்கிழார் பெருமான் பாடிமுடித்தார்.
சேக்கிழார் சைவ வேளாளர் ; சென்னையை
அடுத்த குன்றத்தூரில் பிறந்து வளர்ந்தவர்; இரண் டாம் குலோத்துங்க சோழனிடம் முதல் அமைச்ச ராக இருந்தவர்; அதனுல் சோழப் பெருநாடு முழுவ
தும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர்; அந்த
வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தியவர்.
தாமஸ் கார்லைல் என்னும் பெரியார் பிரெடரிக் பெரியார் வரலாற்றை எழுத இரண்டு முறை
ஜெர்மன் நாட்டுக்குச் சென்று ஆராய்ச்சி செய்தார்
என்று அவர் வரலாறு கூறுகிற்து. சேக்கிழார் பெருமானும் இவ்வாறே நாயன்மார் வரலாறுகளை