பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பெருமான்

65


அறியத்தமிழகம் முழுவதும் சுற்றி, அவர்தம் வரலாறு

களுக்குரிய சான்றுகளைத் திரட்டிஞர். எலும்பைப் பெண்ணுக்குதல், முதலை உண்ட பாலன அழைத் தல் போன்ற அற்புத்ச் செய்திகள் நீங்கலாக உள்ள பிற எல்லாச் செய்திகளும் தக்க சான்றுகள் கொண்டே கூறப்பட்டுள்ளன என்று கூறலாம்.

வரலாற்றுச் சிறப்பு

கி, பி. 642-இல் நரசிம்ம பல்லவனுக்கும் இரண்டாம் புலிகேசி நடந்த வாதாபிப் போர் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. மு. த ல் விக்கிரமாதித்தனுக்கும் பாண்டியன் நெடுமாறனுக் கும் நெல்வேலியில் நடைபெற்ற போர் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சேக்கிழார் கொடுத்த வாத பிப் போர் விவரங்களைக் கொண்டுதான் சிறுத் தொண்டர் காலமும், அவர் காலத்தவரான அப்பர் சம்பந்தர் காலமும் வரலாற்று ஆசிரியரால் துணியப் பட்டன. அப்பர் காலத்தில் வாழ்ந்த பல்லவன் சமணத்திலிருந்து சைவளுக மாறிப் பாடலிபுரத் தில் (பாதிரிப் புலியூரில்) இருந்த சமணப் பள்ளி களையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக் கொண்டு குணபர ஈசுவரம் எடுத்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார். குணபரன்' என்ற விருதுப் பெயரை உடையவன் முதலாம் மகேந்திர வர்மன் என்பவன். அவன் காலம் கி. பி. 600-630 எனவே, நரசிம்மவர்மன் தந்தையான மகேந்திர வர்மன் காலத்திலும் அப்பர் வாழ்ந்திருந்தார் என்ற உண்மை இதனுல் புலனுகிறது.

மூர்த்தி நாயனர் என்பவர் சந்தனக் கட்டை களை அரைத்து மதுரைச் சிவன் கே வி லு க் கு ச் சந்தனம் வழங்கி வந்தார். அவர் காலத்தில் பாண் டிய நாடு வடுகக் கருநாடன் ஆட்சிக்குட்பட்டது. அப்புதிய மன்னன் வேற்றுச் சமயத்தவன் ஆதலின் சிவபூசைக்கு இடையூறு விளைத்தான் என்று பெரிய புராணம் பேசுகிறது. இங்ங்ணம் உண்டான் இடை