சேக்கிழார் பெருமான்
69
(ஆ) சம்பந்தர் அப்பரை முதன் முதல் சீர்காழி யிற் சந்தித்துத் தங்கியிருந்த பொழுது பலவகைப் பதிகங்கள் பாடினர் என்று சேக்கிழார் கூறியுள்ளார். (6) நாயன்மார் பதிகச் சந்தத்திலேயே அப்பதி கங்களைக் குறிக்கும் இடங்களில் சேக்கிழார் பாக் களும் அமைந்திருத்தல் இன்பமூட்டுவதாகும்.
(அ) பித்தா பிறைசூடி'என்ற பதிகத்தைச் சுந்தரர் பாடினர் என்பதைக்கூறும் பெரிய புராணச் செய்யுட்கள் இந்தளப் பண்ணில் அமைந்திருத்தல் படித்து இன்புறத்தக்கது.
(ஆ) அப்பர் திருவையாற்றைத் தரிசிக்கையில் பாடிய "மாதர் பிறைக் கண்ணியான” என்ற திருப் பதிகத்தைக் குறிக்கையில், சேக்கிழார் அதே சந்தத் தில் செய்யுள் செய்திருத்தல் படித்துச் சுவைக்கத் தக்கது, }
(7) நாயன்மார் பாடலைக் கவி கூற்ருக அங் கங்கே அமைக்கும் வன்மையும் சேக்கிழார்க்கு உண்டு.
(8) சேக்கிழார் சில இடங்களில் தேவாரப் பதி கங்களின் உட்குறிப்பை எடுத்துக் காட்டுவார்:
சேக்கிழார் சைவத்திருமுறைகளில் புலமை பெற்று விளங்கினுற் போலவே இசைக்கலை, நடனக் கலை, வானநூற்கலை, மருத்துவக்கலை முதலிய பல கலைகளிலும் சிறந்த புலமை சான்றவர் என்பது பெரிய புராணத்தால் தெரிகின்றது.
(1) இறைவனுல் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் முதன் முதல் திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில் பாடிய பித்தா பிறைசூடி என்று தொடங்கும் பதிகத்தை இந்தளம் என்ற பண்ணில் பாடினர் என்பதைக் கூறும் இடத்து, சேக்கிழார் விளக்கும் பண்வகை முதலியன இசைப்புலமை உடையவரே நன்குணர்ந்து இன்புறக்கூடும்.
5