70
இலக்கிய அமுதம்
" முறையால்வரு மதுரத்துடன் மொழி இந்தள
. . . முதலில்
குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினுல், நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகழ்
- வகையால் இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர்
இல்லான்."
(2) ஆளுயர் புராணத்தில் புல்லாங்குழலைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முறை, அக் குழல் வைத்து ஆளுயர் பாடியமுறை, அக்குழல் இசை யால் உலகத்து உயிர்கள் அடைந்த இன்பம் என்ப வற்றை மிக்க விளக்கம்ாகக் கூறியுள்ள்தை நோக்க, சேக்கிழார் இத்துறையிற் பண்பட்ட புலம்ையுடை யார் என்பதை நன்குணரலாம். சேக்கிழார் நடனக் கலே நுட்பத்தையும் நன்கறிந்தவர் என்பது அப்பர் புராணச் செய்யுட்களால் அறியலாம். -
' கற்பகப் பூந் தளிரடிபோய்க் காமருசாரிகைசெய்ய
வுற்பலமென் முகிழ்விரல்வட் டனயோடுங்
கைபெயரப் பொற்புறுமக் கையின் வழி பொருகயற்கண்
புடைபெயர அற்புதப்பொற் கொடி துடங்கி யாடுவபோ
லாடுவார்.” வானதுாற்கலை -
ச ம் ப ந் த ர் திருவலஞ்சுழியில் தங்கியிருந்த பொழுது இளவேனில் முதுவேனில் ஆயிற்று என் பதைச் சேக்கிழார் கூறல் நோக்கத்திக்கது. அது, 'சூரியன் மிதுனராசியிற் சேர்ந்ததால், வெங்கதிர் பர்ப்பினர்; அதனுல் முதுவேனிற் காலம் தொடக்க மாயிற்று' என்பது. மிதுனம் இரட்டை யாதலின் சேக்கிழார் அதனைத் துணைப்புணர்ஒரை என்று குறித்தது, அவரது வானநூற் புலமையை நன்கு உணர்த்துகிறது. இங்ங்னமே சேக்கிழார் கார்காலம், பனிக்காலம், இளவேனிற் காலம் முதலியன பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் அவரது வானநூற்.
புலமை நன்கு விளங்கக் காணலாம்.