சோழர் வரலாறு
75
வலிகுன்றத் தொடங்கியது. அதல்ை அப்பெரு மகன் சைவத்தை வளர்க்கப் பல சிவன் கோவில்கள் கட்டினன்; வைணவரையும் ஆதரித்தான் இவ்வறி வுட்ைப செயலால் சைவசம்ய் குரவராலும், திரு. மங்கையாழ்வாராலும் பாராட்டப் பெற்ருன். அவனுக் குப் பின் வந்த சோழர்கள் கும்ப்கோணத்தை அடுத்த பழையாறையைத் தலைநகராகக் கொண்டு. மிகச் சிறிய நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். அவு ருள் மங்கையர்க்கர்சியார் தந்தை, தமையன், சுத் த்ரர் காலத்தில் பாண்டியன் மருமகளுன சோழன் என்பவர் குறிக்கத்தக்கவர்.
ஒரு சமயம் பல்லவர்க்கும் பிறிதொரு சமயம் பாண். டியிர்க்கும் அடங்கி வாழ்ந்து வந்த இடைக்காலச் சோழர்கள், தங்கள் அரச செல்வாக்குச் சுருங்கிய போதிலும், சைவ சமயப்பற்றுச் சுருங்காது வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் சைவத் திற்குச் சம்னராலும் பெள்த்தராலும் ஏற்பட்ட துன் பங்களை நீக்கிச் சைவத்தைப் பாதுகாத்த பெருமை சோழர்க்கே உரியது.
பிற்காலச் சோழர் (கி. பி. 900-1300)
கும்பகோணத்தை அ டு த் த திருப்புறம்பியம் என்னுமிடத்தில் கி. பி. 9-ஆம் நூற்ருண்டின்_பிற். பாதியில் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் கடும்போர் நடந்தது. அப்போரில் ஆதித்த சோழன் என்பவன் பல்லவர் சார்பில் நின்று பாண்டியனைமுறியடித்தான். அந்த ஆதித்தனே பின்பு பல்லவனையும் வென்று, சங்ககால்க் கரிகாலனைப் போல, வடபெண்ணையாறு வரை சோழப் பேரரசை ஏற்படுத்தின்ை. இவன் மர பினர் பலர் சோழப் பெருநாட்டை ஆண்டனர்.
இச்சோழப் பேரரசருள் முதல் இராசராசனே சிறந்த அரசியல் பேரறிஞன். சோழப் பேரரசை நன்கு அமைத்து நிலைபெறச் செய்த பெருமை இவனைய்ே சாரும். இவன் உண்டாக்கிய பேரரசு