பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இலக்கிய அமுதம்


மிகுதிப்படுத்தினுன் , வடக்கே பெருஞ் சேனையை அனுப்பி, வடவேந்தர்களை முறியடித்துக் கங்கையாறு: வரையில் தன் போர்த்திறனைக் காட்டித் தான் புதி தாக அமைத்த பெருநகரத்தைத் துய்மைப்படுத்தக் கங்கை நீரைக் கொண்டு வந்தான்! அவன் ஏற்படுத் திய புதிய தலைநகரம் கங்கை நீர் கொண்டு தூய்மைப் ப டு த் த ப் பட்டதால், கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயர் பெற்றது. அங்கு அவளுல் கட்டப்பட்ட கோவில் கங்கை கொண்ட சோழேச்சரம் எனப் பட்டது. அங்கு வெட்டுவிக்கப் பெற்ற மிகப் பெரிய ஏரி சோழகங்கம் எனப் பெயர் பெற்றது. இன்றும் பல இடங்களில் கங்கை கொண்டான்' என்னும் பெயரால் ஊர்களும் மண்டபங்களும் வழங்கி வருத லுக்கு இப்பேரரசனே காரணன் என்பது அறியத் தகும’

சோழர் வீழ்ச்சி

கி. பி. 13-ஆம் நூற்ருண்டில் மூன்றும் இராச ராசன், மூன்ரும் இராசேந்திரன் என்ற சோழ வேந் தர் காலத்தில் பாண்டியர் படையெடுப்பாலும், மைசூர் நாட்டை ஆண்டு வந்த ஹொய்சலர் படை யெடுப்பாலும் சோழ்ப் பேரரசுக்கு உட்பட்ட சிற்ற ரசர் ஆங்காங்கு விளைத்து வந்த குழப்பங்களாலும், முதலாம் இராசராசன் வலிமையுற அமைத்த சோழப் பேரரசு சிறிது சிறிதாக நிலைகுலைந்து சிதற்த் தொடங்கியது. சோழர்கள் பாண்டிய நாட்டில் செய்த கொடுமைகளுக்கெல்லாம் பாண்டியர்கள் சோழ நாட்டில் பழி தீர்த்துக் கொண்டனர். ஆங்காங்கு இருந்த அரண்மனைகள் தவிடுபொடியாயின். இறுதி யில் சோழநாடு சீர்குலைந்துவிட்டது. -

சிற்றரசர்கள்

சோழப் பெரு நாட்டில் மலையமான்கள், சாம்புவ:

ராயர், காடவராயர், வாணகோவரையர், அதியமான்

கள், கங்கர், தெலுங்குச் சோழர் முதலியோர் சிற்றர