பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இலக்கிய அமுதம்


கோவில்கள், மடங்கள் இவற்றைச் சேர்ந்த நிலங் களுக்கு வரி இல்லை. சோழப் பேரரசர் காலத்தில் பொன்னுலும் செம்பாலும் செய்யப்பட்ட காசுகள் வழங்கி வந்தன. அக்காலத்தில் எண்ணல், எடுத் தல், முகத்தல், நீட்டல் என்னும் அளவைகள் வழக் கில் இருந்தன. குன்றி, மஞ்சாடி, கழஞ்சு, பலம், கஃசு என்பன நிறுத்தல் அளவைப் பெயர்கள். செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, கலம் என்பன முகத்தல் அளவைப் பெயர்கள். சாண், முழம், குழி, வேலி, காணி என்பன நில அளவைப் பெயர்கள்.

கிராம ஆட்சி

கிராம ஆட்சிக்கு, கிராமத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் ஓர் உறுப்பினர் பொதுமக்களால் தேர்த் தெடுக்கப் பட்டனர். எந்தச் சபையிலாவது உறுப் பினராகவிருந்து கணக்குக் காட்டாதிருந்தவரும், ஐவகைப் பெரும் பாதகங்கள் புரிந்தோரும், கிராமக் குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட வரும், பிறர் பொருளைக் கவர்ந்தோரும், கள்ளக் கையெழுத்திட்டவரும், கு ற் ற ங் காரணமாகக் கழுதைமீது ஏற்றப்பட்டவரும், எத்தகைய கையூட் டுக் கொண்டோரும், கிராமத்துரோகி என்று கருதப் பட்டவரும், இங்குக் குறிக்கப் பெற்ருேர்க்கு உறவின ரும் தம் வாழ்நாள் முழுமையும் கிராம சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதற்குத் தகுதியற்றவராவர். இத்தேர்தல் குடவோலே வாயி லாக அரசாங்க அதிகாரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப் பினர் பல வேலைகளைக் கவனிக்கக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்; சம்வத்சர வாரியம், ஏரிவாரியம், பஞ்சவாரியம், தோட்டவாரியம், பொன்வாரியம் என்பன அக்குழுக்களின் பெயர்கள். இவர்கள் ஆளுங்கணத்தார் எனவும், கணப் பெருமக்கள் எனவும் பெயர் பெற்றனர்.