உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் வரலாறு

81


ஊர்தோறும் எழுதப்படும் வணங்களைக் (பத்திரங்களை) காப்பிட ஆவணக்களரி இருந்தது. கோவில்கள்

நாயன்மார் காலத்தில் (கி. பி. 600-900) பாடல் பெற்ற கோவில்கள் செங்கற்கோவில்களே. சைவ சமயத்தில் அழுத்தமான பற்றுடைய சோழப் பேரரசரும், சோழ மாதேவியரும், சிற்றரசரும் அக். கோவில்களைக் கற்றளிகளாக மாற்றினர். பல புதிய சிவன் கோவில்களும் கட்டப்பெற்றன. அவற்றுள் தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழேசுவரம், கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் கோவில், திருபுவனம் சிவன் கோவில் என்பன சிறந்தவை. இப்பெருங்கோவில்களின் கோபுர அமைப்பும், விமான அமைப்பும், படிவங்கள், திருமேனிகள் இவற்றின் அமைப்பும் சோழர் காலக் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலிய கலை களின் வளர்ச்சியை நன்கு அறிவிக்கின்றன. இவற்றை நேரில் கண்டு உணர்தலே சாலச் சிறந் தது. வழி வழிச் சைவராகிய சோழர் சைவத்தைத் தம் உயிரென வளர்த்தனர். அவர்கள் செய்துள்ள கோவில் திருப்பணிகள் எண்ணில. ஒவ்வொரு பெருங் கோவிலிலும் திருமுறைகள் ஒதப்பட்டன. இசையையும் நடனத்தையும் வளர்க்க இசைவாணி கிள் அமர்த்தப்பட்டனர். விழாக்கள் சிறப்புற நடை பெற்றன. நாடெங்கும் மடங்கள் தோன்றிச் சைவத்தை வளர்த்து வந்தன. கோவில்களில் இசையும் நாடகமும் வளர்ச்சி பெற்றன. வைணவ மும் சமணமும் சோழர்களால் ஆதரிக்கப் பெற்றன. கோவில்களில் நூல் நிலையங்களும் மருத்துவ மனை களும் இடம் பெற்றிருந்தன.

கல்வி

சோழப்பேரரசர் வடமொழிய்ை ஆதரித்தனர்: தமிழ் நாட்டு மொழியான தமிழைத் தம் உயிர் போலப் பாதுகாத்தனர். சைவத்திருமுறைகள்