உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இலக்கிய அமுதம்


நுணிப் போர்” (மணிமேகலை 19-80) என வரும். தொடரில் உள்ள நாடகம் என்னும் சொல்லுக்குக் "கதை தழுவி வரும் கூத்து என்று டாக்டர். உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதியிருப்பது கவனிக்கத், தகும். எனவே, நாடகம் பற்றிய காவியங்கள் மணி மேகலை ஆசிரியர் காலத்தில் (கி. பி. 2ஆம் நூற். ருண்டில்) இருந்தன என்பது தெளிவு, மணிமேக. லைக்கு முற்பட்ட திருக்குறளிலும் கூத்தாட்டு அவை' (குறள், 332) குறிக்கப்பட்டுள்ளது. இங்குக் கூத். தாடுதல் நடித்தல் என்னும் பொருளில் வந்துள்ளது.

கூத்து அல்லது நாடகம் என்பது நுண்கலை களுள் ஒன்ருகும். வெளி நாடுகளுடன் பன்னெடுங் காலமாக வாணிகம் செய்து வந்த தமிழர்-இயல், இசைக் கலைகளில் வல்லராயிருந்த தமிழர்-நாடகக் கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தன்ர் என்று: கொள்வது தவருகாது. இயல், இசை என்னும் இரண்டு பிரிவுகளும் கேட்பவருக்கு இன்பத்தைத் தருவன : நாடகம் கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பமும் பயப்பதாகும். எனவே, நாடகமே மிக்க பயனுள்ளதாக அறிவுடையோர் கருதுவர். நாடகத். தில் இயல், இசை ஆகிய இரண்டும் கலக்கின்றன. நாடகத்தில்தான் முத்தமிழையும் ஒருங்கே காண இயலும்.

கோவில் விழாக்களில்தான் நாடகம் தோற்றம் எடுத்தது என்பது அறிஞர் கருத்து. ஆடல், பாடல் என்னும் இரண்டின் சேர்க்கையாக முதலில் நாடகம் அமைந்திருந்தது. பின்பு பாட்டாக அமைந்த உரை நடை இடை இடையே கலந்தது. அதன் பின்னர்ப் பேச்சு நடையில் அமைந்த உரைநடை சேர்ந்தது. எனவே ஆடல், பாடல், பாடல் வடிவில் அமைந்த உரைநட்ை, பேச்சு உரைநடை என்பன சேர்ந்து நாடகத்தை அழகு செய்தன. இங்ங்ணம் வளரத் தலைப்பட்ட நாடகம், பொது மக்களுக்கென்றும், அரசர்க்கு என்றும் இறுவகையாகப் பிரிந்தது. அவை: *வேத்தியல்', 'பொதுவியல்' எனப்பட்டன.