உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ்

87


பிற்காலச் சோழர் காலத்தில் ஆண்டு தோறும் வைகாசி விழாவில் தஞ்சை இராசராசேச்சரத்தில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. அதனை நடித்துக் காட்டிய விசய ராசேந்திர ஆசாரி யனுக்கு ஆண்டுதோறும் 120 கலம் நெல் தரப் பட்டது. இராசராசன் தஞ்சையில் பெரியகோவில் கட்டிய முறை, அவனது வரலாறு, அவன் மனைவி யர் அக்கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள், அக் கோவிலைப் பற்றிக் கருவூர்த் தேவர் பாடியது. போன்ற பல செய்திகள் இந்நாடகத்திற் பல காட்சி களாக அமைந்திருக்கலாம்.

விக்கிரமாதித்த ஆசாரியன் என்ற இராசராச நாடகப் பெரியன் என்பவன் பந்தனை நல்லூரில் நட்டுவப் பங்கு, மெய் மட்டிப் பங்கு (நாடகக் காணி) இவற்றைப் பெற்றவய்ை இருத்தான். என்று அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுவதால், இராசராச நாடகம் (முதலாம் இராசராசனைப் பற்றியது என ஒன்று இருந்தது, அந்நாடகம் நடிக்கப் பட்டது. என்பன அறியலாம்.

இந்நூலில் இராசராசனது இளமைப் பருவம், அவன் அரசன் ஆனமை, போர்ச் செயல்கள், ஆட்சி முறை, இராசராசேசுவரம் எடுப்பித்தமை, திருமுறை களைத் தொகுத்தமை முதலிய செய்திகள் பல காட்சி களாக இடம் பெற்றிருக்கலாம்.

முதற் குலோத்துங்கன் காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற ஒன்று செய்யப்பட்டது. செய் வனுக்குப் பரிசு தர்ப்பட்டது. அஃது திருப்பாதிரிப் புலியூரைப் பற்றியது. அம்மன் கன்னியாக இருந்து சிவனை வழிபட்டமை, அப்பர் சமணராயிருந்தமை, பின் சைவரானமை, சமணருடைய சொடுமைகட்கு ஆளானமை, பிறகு கடலில் மிதந்து கரை சேர்ந்து அவ்வூர்க்கோவிலில் பதிகம் பாடினமை, மகேந்திரன்

4. S. I. I. 2. 62

மிழ்ப் பொழில், ெ பக்கம் 152-53. స్ట్ర్యో, 3 అని 28, uఉత్య 15