பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இலக்கிய அமுதம்


அங்கிருந்த சமணப்பள்ளியை இடித்துக் குணபர ஈசுவரம் கட்டினமை போன்றவற்றைக் காட்சி களாக் கொண்ட நூலாக இருக்கலாம். அது நடிக்கப் பெற்றமைக்குச் சான்று இல்லையாயினும், சமயப் பற்று மிக்கிருந்த அக்காலத்தில் அது நடிக்கப்பட்ட தெனக் கருதுதல் தவருகாது. இங்ங்னம் சைவ அரசர்களையும் நாயன்மார்களையும் பற்றிய நாடகங் கள் சிலவேனும் அக்காலத்தில் நடிக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.

சோழர்க்குப் பின்

கி. பி. 14-ஆம் நூற்ருண்டில் மாலிக்-காபூர் படை யெடுப்புக்குப் பிற்கு சேர, சோழ, பாண்டிய அரசுகள் திலை தளர்த்தன. விசய நகர வேந்தர் ஆட்சி சிறிது காலம் சமயத்தைப் பாதுகாத்தது. அப்பொழுது இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென்னுட்டில் நாயக்கராட்சி மறையும் வரையில் இக்கலைகள் ஒரளவு உயிர்பெற்று வாழ்ந் தன. 17 ஆம் நூற்ருண்டுக்குப் பிறகு நாடு பல துறைகளிலும் அல்லற்பட்ட காரணத்தால் நாடகம்

முதலிய கலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.

“கி.பி. 17-ஆம் நூற்ருண்டினிறுதி தொட்டுக் கூத்து நூல்கள் சில வேரற்று வீழ்ந்த நாடகத் தமிழினின்றும் கிளைப்பனவாயின. இடையிடையே கவிகூற்று மேவி, இழிசினர் நடக்கும் இயல்பின வாகிக் கூத்தும் பாட்டும் கொண்டு நடப்பினவெல் லாம் கூத்து நூல்களாம். சீகாழி அருளுசலக் கவி ராயர் செய்த இராம நாடகமும்', குமர குருபர சுவாமிகள் செய்த் மீனுட்சியம்மை குற'மும், திரிகூட ராசப்ப கவிராயர் செய்த 'குற்ருலக் குறவஞ்சியும்" இக்கூத்து நூலின்பாற் படுவனவாம். முக் கூடற் பள்ளு', 'பருளை விநாயகர் பள்ளு முதலியன்வும் கூத்து நூல்களேயாம். இவையெல்லாம் இயற் றமிழ்ப்"புலமை சான்ற பர்வலர் இயற்றினவாம். "சுத்தாநந்தப் பிரகாசம் என்றதோர் பரதநூல்