8
இலக்கிய அமுதம்
பினராய் இராதவராய் இருப்பவரே ஊரினரால் தேர்ந்தெடுக்க உரிமை உட்ையவராவர்.
அவையில் உறுப்பினராய் இருந்து கணக்குக் காட்டர்தவரும், ஐவகைப் பெருந்தீமைகள் செய்த வரும், கிராம்க் குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், கள்ளக் கையெழுத்திட்டவரும், பிறர் பொருளை வவ்விளுேரும், குற்றம் காரணமாகக் கழுதையின்மீது ஏற்றப்பட்டவரும், கையூட்டு (லஞ்சம்) வாங்கினவரும், கிராமத் துரோகி என்று கருதப்பட்டவரும், இவர்கட்கு உறவினரும் தம் வாழ் நாள் முழுமையும் உறுப்பின்ராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதற்குத் தகுதியற்றவராவர். தேர்தல் முறை
தேர்தல் நடைபெறும் நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், சபை கூடுவதற்கான மாளிகையில் ஊரார் அனைவரையும் கூட்டுவர். கூட்டத்தின் நடு வில் ஒரு குடம் வைக்கப்படும். அங்குள்ள பெரிய வருள் ஒருவர், அக்குடத்துள் ஒன்றுமில்லை என்பதை ஊரார்க்குக் காட்டிக் கீழே வைப்பர். பின்னர், ஒவ் வொரு குடும்பினரும் தம் குடும்புக்கு ஏற்ற ஒருவர் பெயரைத் தனித்தனி ஒலையில் எழுதுவர்; அவ் வோலைகள் சேர்த்து அக்குடும்பின் பெயரெழுதிய வாயோலையால் மூடப்பட்டுக் கட்டப்படும்; அக்கட்டு, குடத்துள் வைக்கப்படும். இவ்வாறே எல்லாக் குடும்பினரும் குடவோலை இடுவர். பின்னர், ஊர்த் தலைவரான முதியவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் குடத்திலிருந்து ஓர் ஒலைக்கட்டை எடுப்பிப்பர்; அதனை அவிழ்த்து வேருெரு குடத்தில் இட்டுக் குலுக்குவர் அவற்றுள் ஒன்றை அச்சிறுவனக் கொண்டு எடுப்பிப்பர் ; அதனைத் தாம் வாங்கிக் கிராமக் கணக்கனிடம் தருவர். அவன், தன் கையில் ஒன்றும் இல்லையென்பதை அவையோர்க்குக் காட்டி, அவ்வோல்ையைப் பெற்று, யாவரும் கேட்க அதில் எழுதப்பட்டுள்ள பெயரை உரக்க வாசிப்பான். பின்