இடைக்காலத் தமிழ்
95
எறிந்துவிட்டான். மாலும் நான்முகனும் காணுத சிவன் ' என்று பெரிய புராணத்தில் பல இடங்களில் திருமாலைக் குறைத்துப் பேசும் நிலை ஏற்ப்ட்டது.
நீல கேசியில் காணப்படும் சமயவாதங்களைப் போன்ற செய்திகள் சிவஞான சித்தியாரில் காணப் படலாயின. சைவம் ஒழிந்த ஒவ்வொரு சமயத்தை யும் எடுத்து விளக்கி, அதன் குறைகளைக் காட்டிக் கண்டிப்பது சிவஞான சித்தியார் பரபக்கம் என்பது.
சோழராட்சிக்குப் பிறகும் இச்சமய வெறுப்பு நின்றபாடில்லை என்பதை சிவிப்பிரகாசர் செய்த "இயேசுமத நிராகரணம், பிள்ளைப் பெருமாள் அய் யங்கார் செய்த "அஷ்டப் பிரபந்தம்” முதலிய வற்றைக் கொண்டு நன்கறியலாம். -
கி. பி. 14-ஆம் நூற்ருண்டில் தமிழகத்தில் இசுலாம் பரவத் தொடங்கியது. பல்லாயிரக்கணக் கான சாதிகளாகப் பிரிக்கப்பட்டு, சமுதாய உயர்வு தாழ்வுகளால் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் புண் பட்ட நெஞ்சேர்டு வாழ்ந்த மக்களும், சாதிகளை வெறுத்து வந்த பிறரும் சாதி வேறுபாடுகளைப் பற்றிப் பேசாத் இசுலாத்தையும், பின்வந்த கிறித்த வத்தையும் உளம்ாறத் தழுவி மகிழ்ந்தனர்.
சமயங்களால் மொழிக்கலப்பு
பல்லவ வேந்தர் முதலில் பிராகிருத மொழியை யும் பின்பு வடமொழியையும் தங்கள் பட்டயங்களில் எழுதினர். அக்காலத்தில் காஞ்சியில் சிறந்த வட மொழிக் கல்லூரி ஒன்று இருந்தது. அதனிற் கல்வி கறகக கதமப குல முதல மனனனு ைமயூரசாமன காஞ்சிக்கு வந்திருந்தான். நாலந்தாப் பல்கலைக் கழகப் பேராசிரியராயிருந்த தர்மபாலர் காஞ்சிப் பதியினர்; எனவே, அவர் அக்கல்லூரியிற் கல்வி பயின்றவராதல் வேண்டும். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமண மடத்தில் பாலிமொழி நூல்கள் வட மொழியில் பெயர்த்து எழுதப் பெற்றன. போதி