98
இலக்கிய அமுதம்
ரையம் முதல் வடுகச் சந்தம் ஈருகக் குறிக்கப்பெற்ற நூல்கள் பிறமொழி நூல்கள் என்பது பெறப்படல் காண்க. தமிழ் யாப்பிலக்கணத்தைப் பெருக்கப் பிற மொழி இலக்கண நூல்களையும் இவ்விடைக்கால இலக்கண் ஆசிரியர்கள் கைக்கொண்டனர் என்பது இதல்ை பெற்ப்படுகின்றதன்ருே ? " வடநூல் வழித் தமிழாசிரியர் ' என்று ஒருசார் ஆசிரியர்கள் இடைக் காலத்தில் இருந்தனர் என்பது ய்ாப்பருங்கல் விருத் தியுரையால் தெரிகிறது.
தொல்காப்பியர் செய்த செய்யுளியலில் காணப். பெருத பல, பின் வந்த யாப்பருங்கலத்திற் காணப் படுகின்றன என்பதை நோக்க, வடவர் செல்வாக்கு எந்த அளவு தமிழ் மொழியில் சென்றிருந்தது என் பதை நன்கு உணரலாம்.
பல்லவர் காலத்தில் ஆழ்வார்கள் பாடிய நாலா யிரம் பாக்களுக்குச் சோழர் காலத்தில் பேருரை வகுக்கப்பட்டது. அப்பேருரை பாதி தமிழும், பாதி வடமொழியும் கலந்த புதிய நடையில் எழுதப் பெற். றது. அதற்கு 'மணிப்பிரவாள நடை என்பது பெயர். முத்தும் பவளமும் கோத்தாற் போன்றது என்பது: பொருள். பின் நூற்ருண்டுகளில் எழுந்த அஷ்டப் பிரபந்தம் வடமொழிச் சொற்களை மிகுதியாக. உடையது. வில்லிபாரம் பாதிதமிழ், பாதி வடமொழி' என்னும் அளவில் பாடப்பெற்றது. சுருங்கக்கூறின், வடமொழி வல்ல பிராமணர்கள் செய்த நூல்களெல். லாம் வடமொழிக் கலப்பு மிக்குடையனவாகக் காணப்: பட்டன. பிராமணர் ஒழிந்த ஏனையோர் பாடிய நூல் களில் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களே மிகுந்து,. வடசொற்கள் குறைந்து பயிலுதலைக் காணலாம். தமிழகத்தில் பல நூற்ருண்டுகள் தங்கித் தமிழ்ப் புலவர் மரபில் வந்த பிராமணர் செய்த பாக்களில் பெருங்கலப்பைக் காணுதல் அரிது. சம்பந்தர் பாடல்: கள் இதற்கு ஏற்ற சான்ருகும்.