பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இலக்கிய அமைச்சர்கள்

2 . இலக்கிய அமைச்சர்கள் ரைத் தம் அரசவையில் வைத்திருந்தனர். அரசன் ஒரு வனே ஒரு நாட்டின் செய்தி அனைத்தையும் தனியனுய் ஆய்ந்து ஆட்சி நடத்துதல் இயலாத செயலாகும். ஆதலின் நாட்டினை நன்முறையில் அமைத்து இயக் கும் அமைச்சர் பலரைத் தேர்ந்து ஆட்சிப் பொறுப்பை அவர்கள்பால் வகுத்து வழங்கியிருப்பான். அவர்கள் தத்தம் துறையினை நன்கு ஆய்ந்து தக்கவாறு அரசி யலை நடாத்துவர். அதனுல்தான் நாட்டினை நன் முறையில் அமைத்துக் காக்கும் அருந்திறல் படைத்த அன்னவரை நம் முன்னேர் அமைச்சர்' என்று குறித் தனர். இதனை அமாத்தியர் என்னும் வட சொல்லின் திரிபு என்பர் சிலர். அமாத்தியர் என்னும் சொல்லுக் குப் பக்கமிருப்பார் என்பது தக்க பொருள். அறிகொன்(று) அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.' என்னும் திருக்குறளில் உரையாசிரியராகிய பரிமேல ழகர் உழையிருந்தான் என்னும் தொடர் அமாத்தியர் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு என்று குறிப் பிட்டுள்ளார். அரசனுக்கு உழையிருப்பார் பலருளர். எனினும் உறுதி உரைத்தற்கு உரியார் அவ் அமைச் சரே. அவரும் உழையிருப்பாருள்ளே ஒருவராயினும் உயர்மதி படைத்த ஆட்சி உறுப்பினரை அத்தகு பெய ரால் குறிப்பிடுவது சிறப்பன்று. ஆதலின் நாட்டினை அமைப்பவர் நல்லமைச்சராவர் என்று கொள்ளுதலே சாலச் சிறந்த தொன்ருகும். மனேயரசும் காட்டரசும் மனையறமாகிய ஒரு சிற்றர்சை வெற்றியுடன் நடத்துவதற்குக் கணவகிைய தலைவன் அரசவைான்.