பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. சச்சந்தன் அமைச்சன் சிந்தாமணியின் சிறப்பு தமிழ்ணங்கின் திருமுடியை அணிசெய்யும் மணி யாகத் திகழ்வது சிந்தாமணி என்னும் செந்தமிழ்க் காவிய மாகும். ஐம்பெருங்காவியங்களுள் தலைசிறந்து விளங்கு வது இச் சிந்தாமணியே. இதன் முழுப்பெயர் சீவக சிந்தாமணி என்பதாயினும், தமிழர் சிந்தையெல்லாம் இன்பூட்டும் இனிய காவியமாக எழுந்ததாகலின் இதனைக் கற்ருேர் சிந்தாமணி என்றே வழங்க லுற்றனர். இந்நூல் தோன்றிய பின்னர் இதனைக் கற்றுணர்ந்த புலவர்களே சிறந்த புலவர்கள் என்று போற்றப் பெற்றனரெனின், இதன் பெற்றியை என் னென்பது? மண நூல் மாண்பு இதனை மணநூல் என்றும் அறிஞர் மன மகிழ்ந்து போற்றுவர். இக்காவியத்தின் தலைவனுகிய சீவகன், மகளிர் எண்மரை மனங்கொண்டு இன்புற்ற வர லாற்றை விரித்துரைப்பதால் இந்நூல் மணநூல் என்று பாராட்டப் பெற்றது என்பர். சொல்மணமும் பொருள்மணமும் நிறைந்து கமழும் சிறந்த இயல் பினல் இந்நூல் மணநூலெனப் பெயர்பெற்றது என்று கூறலும் தகும். இழுமென் மொழியால் விழு மியது நுவலும் வனப்பினைத் தோல் என்று மொழிவர் தொல்காப்பியர். இவ் வனப்பிற்கு எடுத்துக் காட்டாகச் சிந்தாமணிக் காவியத்தையே குறிப்பிட்டார் உரையாசிரியராகிய நச்சினர்க்கினியர்.தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, குறுந்தொகை முதலிய