பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இலக்கிய அமைச்சர்கள் பழந்தமிழ்ப் பெருநூல்களுக்கு உயர்ந்த உரை வகுத்த உச்சிமேல் புலவர்கொள் நச்சினர்க்கினியரால் நல்லுரை வகுக்கும் சிறப்பைப் பெற்றது இச் சிந்தாமணி. அவ் உரையாசிரியரின் உள்ளத்தைக் கவரும் உயர்ந்த காவியநலத்தைச் சிந்தாமணி பெற்றிருந்ததலைன்ருே அவர் அதற்கும் அரியதோர் உரை வகுக்கலாயினர். புவியரசும் கவியரசும் போற்றுதல் சேக்கிழார் பெருமான் காலத்தே சோழ நாட்டை யாண்ட அநபாய சோழன் செந்தமிழ் நூல்களுள் 'சிந்தாமணியே சிறந்ததெனக் கொண்டு அல்லும் பகலும் அந்நூலேயே படித்துச் சுவைத்தான்; தன் அவையிலிருந்த புலவர்களையும் அதனையே சொல்லு மாறு செய்து கேட்டு இன்புற்ருன். கவியரசராகிய கம்பர் பெருமான் தாம் : இராமகாவியம் இயற்றுதற்குச் சிந்தாமணி, திருக்குறள் என்னும் தெள்ளமுத வள்ளங் களிலிருந்து ஒவ்வோர் அகப்பை எடுத்துக்கொண் டேன்' என்று இயம்பியிருப்பாராயின் சிந்தாமணிக் காவியத்தின் செழுஞ்சுவை நலத்தை என்னென்று மொழிவது! இந்நூல் அரசர் முதல் அனைவரும் விரும்பிக் கற்கும் பெருஞ்சுவை செறிந்தது; இன்பத் துறை நாடும் இளையரேயன்றித் துறவு நாடும் துரயோரும் பேணிக் கற்கும் பெருமையுடையது. சச்சந்தன் அமைச்சர்கள் இத்தகைய இனிய காவியத்தின் தலைவனுகிய சீவகநம்பியின் தந்தையாய் ஏமாங்கத நாட்டை ஆண்ட வேந்தன் சச்சந்தன் என்பான். இவ் வேந்தனுக்கு அமைச்சராக விளங்கினேர் கட்டியங்காரன், நிமித்