பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச்சந்தன் அமைச்சன் 95 திகன், உருத்திரதத்தன், தருமதத்தன், மதனன் முதலிய பலராவர். அவருள்ளே தலைமை சான்ற முதலமைச்சனுகச் சிறப்புற்று விளங்கியவன் கட்டியங் காரன் என்பான். இவன் சச்சந்தனுக்கு உயிர்த்துணை வய்ை இருந்தான். அவனுக்கு ஏற்பட்ட சிறப்புக்கள் எல்லாவற்றிற்கும் கட்டியங்காரனே காரணமாவான் என்பதை அவனே இயம்புகின்றன். எனக்குயிர் என்னப்பட்டான் என்னலால் பிறரையில்லான் ' என்று சச்சந்தன் அவனைப் பாராட்டுவதால் புலனுகும். தையல்பால் மையல் ஏமாங்கத நாட்டை இராசமாபுரம் என்னும் நன் னகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சச்சந்தன், தன் மாமனும் மன்னனுமாக விளங்கிய தத்தன் என்பானின் தனிப்பெருமகளாகிய விசயை என்பாளை விழைந்து மணந்தான். அழகே உருவாய் அமைந்த அம்மங்கை நல்லாளை மணம் செய்த பின்னர், மன்னனுகிய சச்சந்தன் அரசியற் செயல்களை அறவே மறந்தான். அவளைப் பிரியாது கூடிக் களிப்பதற்கே பிறந்ததாக நினைந்தான். அத்தையல்பால் கொண்ட மையல் மிகுதியால் அரசியற் பொறுப்பையே முற் றிலும் விட்டொழிக்க எண்ணினன். அரசினை அமைச்சன்பால் சுமத்தல் ஒருநாள் சச்சந்தன் தன் முதலமைச்சனுகிய கட்டியங்காரனைத் தனியே அழைத்து, " அமைச்ச! என் தேவியாகிய விசயை, யான் முன்னைப் பிறவிகளில் செய்த வசையிலாத் தவத்தால் வந்தவள் : எனக்குத் தீஞ்சுவைத் தெள்ளமுதம் போன்றவள் : அன்னவளைச்