பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இலக்கிய அமைச்சர்கள் சின்னேரமும் பிரிந்திருக்க என் மனம் இசையவில்லை, ஆதலின் அரசியற் பொறுப்பை உன்பால் சுமத்தி, அந்தப்புரத்திலேயே அவளுடன் இருக்க விரும்பு கின்றேன்; அரசர்க்குரிய சிறப்புக்களுள் குடையும் முடியும் தவிர ஏனையவெல்லாம் பெற்று நீயே இந் நாட்டை ஆளுக," என்று பணித்தான். பழுதெண்ணும் அமைச்சன் கட்டியங்காரனே பக்கத்திருந்தே பழுதெண்ணும் மந்திரியாகப் பணியாற்றி வந்தவன். அரசினை எவ்வா றேனும் கவரவேண்டும் என்ற கருத்துடனேயே காலம் நோக்கி இருந்தான். மன்னவன் அதனை உணர்ந்தா னல்லன்! தன் மனம் போனவாறு நடத்தற்குக் கட்டியங்காரன் நல்ல துணைவனுய் விளங்கியமையால் அவனையே அமைச்சருள் சிறந்தவன் என்று மகிழ்ந்து போற்றின்ை சச்சந்தன். மேலும் முன் நிகழ்ந்த பல போர்களில் அக் கட்டியங்காரனே மன்னனுக்கு வெற்றி விளைதற்கு உற்ற காரணமாக இருந்தான். இத்தகைய பல காரணங்களால் அவனிடத்துச் சச்சந்தன் முழு நம்பிக்கை கொண்டிருந்தான். தன் தீய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் காலத்தை எதிர்நோக்கி யிருந்த கட்டியங்காரனுக்கு அரசனது செயல் அரிய வாய்ப்பாக அமைந்தது. அவன் அரசனுக்கு இனி யவன் போல நடிக்கலுற்ருன். கட்டியங்காரன் கட்டுரை அமைச்சனுகிய கட்டியங்காரன் அரசனை நோக்கி, அரசே! யானையின்மீது இடத்தக்க அருந் தவிசை இழிந்த நாயின்மேல் இட்டதற்கு ஒப்பாகும் தங்கள்