பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச்சந்தன் அமைச்சன் 99 இந்திரனும் ம்ந்திரத் தலைவர் சொல்லை மதியாது இகழ் வது இல்லை : அவனை யொத்த பேரறிவினராகிய நீவிர் அமைச்சர் சொல்லை இகழ்ந்திருத்தற்குக் காரணம் யாதோ ?' என்று கூறினன். நல்லமைச்சர் சொல்லை யெல்லாம் கேட்ட மன்னன், 'இவ்வுலகில் பிறந்தார் ஒவ்வொருவர்க்கும் அவர் கருத்தொன்றும் காலத்தி லேயே அவரவர்க்குரிய இன்பமும் வாழ்நாளும் எண்ணி அள்க்கப்பட்டுள்ளன; அதற்கு மாருக இவ் வுலகில் ஏதும் நிகழ்வதில்லை என்னும் உறுதியுடை யவன் யான் ; நீவிர் எனக்கு அறிவு புகட்டவேண்டா" எனப் புகன்ருன். அவனது மொழிகேட்ட அமைச்சர் செயலற்றுத் திரும்பினர். அரசனது தவறுபாட்டைக் காணப்பொருத நிமித்திகன் துறவு பூண்டான். கட்டியங்காரன் சூழ்ச்சி அரசுரிமை பெற்ற கடடியங்காரனே அரசனைக் கொன்று நாட்டினைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளச் சூழ்ச்சி செய்யலான்ை. ஒருநாள் கட்டியங் காரன், நீதிநூல் ஒதிய அறிஞர்களையும் அமைச்சர் களையும் ஒருங்கே கூட்டி, 'நம் மன்னனுக்குப் பகையாய தெய்வம் ஒன்றுள்ளது; அது அவனைக் கொல்லுமாறு: அல்லும் பகலும் வந்து என்ன வருத்துகின்றது; அவனது அரியணையில் என்னையே அமருமாறும் தூண்டுகின்றது; இதுபற்றிய நுங்கள் கருத்து யாது?" என்று வினவினன். அதனைக் கேட்ட அமைச்சர்கள் திடுக்குற்றனர். தருமதத்தன் அறிவுரை ஆங்கிருந்த அமைச்சருள் ஒருவகிைய தரும தத்தன் என்பான் எழுந்து, "கட்டியங்கார! மன்னன்