பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இலக்கிய அமைச்சர்கள் மகளிர் மோகமாகிய ஆழ்கடலில் மூழ்கினன்; அவனது கேட்டைக் கண்ட நிமித்திகன் உள்ள்ம் ஆற்ருெளுது துறவு பூண்டான்; நாடும் அரசும் உன் கையிலேயே உள்ளன; அவ்வாறு இருக்கவும் அரசனைக் கொல்லத் துணியும் கொடியோனகிய நின்னைவிட்டுக் குலமும் திருவும் அகலும் ; மன்னவன், ஆசிரியன், தாய், தந்தை, தம்முன் என்ற ஐவருக்கும் தீங்கு சூழ்ந்தவன் நீங்காத நிரையத்துள் ஆழ்வான் அமைச்சகை இருந்து அரசினைக் கவர்ந்தோருள் எவரும் வாழ்ந் தாரல்லர்; இவற்றையெல்லாம் எண்ணி நடந்தால் நன்மையும் புகழும் நண்ணுவாய்,” என்று நீதிமுறைக் கேற்ப இடித்துரைத்தான். இவனது உரையைக் கேட்டும் மதனன் என்னும் அமைச்சன் கொதித்தெழுந் தான். அவன் கட்டியங்காரனுக்கு உற்ற மைத்துனக் கேண்மையளுதலின் அவனது கெடுமதிக்கெல்லாம் உறுதுணையாய் உலவின்ை. கட்டியங்காரன் மறுமொழி தருமதத்தன் உரையினைக் கேட்ட கட்டியங்காரன். அவன்மீது கடுஞ்சினம் ೧ಹಕT-T657 எனினும் அதனை ஒருவாறு அடக்கிக்கொண்டு, 'உன்னைப்போல் உற். ருர்க்குக் கேடு சூழ்வார் ஒருவரும் இல்லை; என்னைப் போல் பொறுமையுடையாரும் இவ்வுலகில் பிறர் இல்லை, ' என்று கூறினன். "மண்ணுலகில் மகளிர் போகமே பெரிதெனக் கருதிக் கிடக்கும் வேந்தனுக்கு விண்ணுலக மகளிர் போகம் விளையுமாறு புரியும் செயல் இனியதாகவும், அவனத் தேவருலகிற்கு அனுப்புவது குற்றமெனக் கூறும் நீ அவனுக்கு ஒவ்வாத செயலையே எண்ணுகிருய், ' என்று தக்க விடை பகர்வானைப்போல,