பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் அமைச்சர்கள்

3

இலக்கியத்தில் அமைச்சர்கள் ·母

வாழ்க்கைத் துணைவியாகிய மனைவி மதியமைச்சா வாள். அவர்கள் இருவரும் மனையரசின் இரு க்ண்கள் போல்வர். ஒருவனின் கண்கள் இரண்டும் ஒன் றையே நோக்குவதுதான் இயல்பு. அவை போன்று காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதிலா ஒரு கருமத்தைச் செய்வதுதான் உயர்வைத் தரும் என்பர் உயர்ந்தோர். இதைப் போன்றுதான் நாடாளும் பேர ரசிற்கு மன்னனும் மதியமைச்சனும் இரு கண்கள் போல்வர். அவர்கள் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆய்ந்து ஒரு செயலைச் செய்தால்தான் அது செம்மை யும் நன்மையும் பயக்கும். y மனையற வண்டி இல்லறத்தை வண்டி என்ருர் ஒரு புலவர். வண்டி யில் பூட்டிய காளைகள் இரண்டும் ஒற்றுமையாக இழுத் தால் தான், வண்டி சேரவேண்டிய இடத்தை இடரின் றிச் சென்றடையும். அக்காளைகளில் ஒன்று ஒரு பக்க மும் மற்ருென்று பிறிதொரு பக்கமுமாக இழுத்தால் வண்டி தடம்புரண்டு குடைசாய்ந்து விடும். இதைப் போன்றே மனையற வண்டியில் பூட்டப்பெற்ற காளைகள் மருவியகாதல் மனையாளும் கணவனும் ஆவர். அவர்கள் இருவரும் சேர்ந்து இழுத்தால்தான் அம் மனையற வண்டியும் நன்ருகச் சென்று இன்ப வீட்டு நெறியில் இயங்கும். அரசியல் வண்டி மனையறம் தாங்கும் வண்டியைப் போன்றதே நாடாளும் அரசியல் வண்டி. அதனைச் செங்கோன்மை யாகிய நன்னெறியில் செலுத்துவதற்கு இரு காளைகள் வேண்டும். அக்காளைகளே அரசனும் அமைச்சனும்