பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இலக்கிய அமைச்சர்கள் மன்னன் மயிற்பொறி அமைத்தல் பின்னர், அரசனுகிய சச்சந்தன், தன்னை நோக்கி வரும் இன்னல்கள் பலவுள என்பதை எண்ணி அறிந் தான். அவன் தனக்கு வரும் தீங்குகளைக் குறித்து ஏங்கினனல்லன். கருவுற்றிருக்கும் தன் தேவியைக் காப்பது எங்ங்னம் என்பதுபற்றியே கலங்கின்ை. பின்னர் ஒருவாறு தேறிக் கைவல்ல தச்சன் ஒருவனை வரவழைத்து, மயில் போன்ற வடிவமைந்த வான வூர்தி யொன்றை அமைக்குமாறு ஆணையிட்டான். அத் தச்சனும் அதனை விரைந்து செய்து கொணர்ந் தான். அப்பொறியினை வலப்புறமாகச் சுழற்றில்ை வானில் எழுந்து பறக்கும். இடப்புறமாகச் சுழற்றில்ை மெல்லக் கீழிறங்கிக் கால்குவித்து நிற்கும். இத்தகைய மயிற்பொறியைத் திறம்பட அமைத்துதவிய தச்சனைப் பெரிதும் மெச்சித் தக்கவாறு மேன்மைப்படுத்தி அனுப் பினன். அதனை ஊர்ந்து செல்லுமாறு தன் தேவிக்குப் பயிற்சியளித்தான். அவளும் விரைவில் அதனைச் செலுத்தும் திறத்தைத் தெரிந்துகொண்டாள். கட்டியங்காரன் போர்க்கோலம் திடீரென்று கட்டியங்காரன் போர்க்கோலந் தாங்கிப் படைகளுடன் வந்து மன்னன் மாளிகையைச் சூழ்ந்து கொண்டான். வாயிற் காவலர் மன்னனிடம் சென்று கட்டியங்காரன் போர் தொடுத்து வந்திருப் பதை அறிவித்தனர். மன்னன் வீரர்களைக் கூவி அழைத்தான். தனது ஆணைவழி நிற்பார் எவரும் இல்லாமையைக் கண்டான். உரிமைமுன் போக்கி யல்லால் ஒளியுடை மன்னர் போகார், ஆதலின், கரு வுற்ற தன் தேவியாகிய விசயுைக்கு அறிவுரையும் தெளி