பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இலக்கிய அமைச்சர்கள் சாற்றுமாறு பணித்தான். அதனைக் கேட்ட நகர மக்கள், இன்னும் என்னென்ன தீங்குகள் நேருமோ என்று. அஞ்சி வருந்தினர். மயிற் பொறியில் சென்று கொண் டிருந்த விசயை, கட்டியங்காரன் அறைவித்த பறை யோசை கேட்டு, 'நாயகன் இறந்துபட்டான் போலும்’ என்று எண்ணிப் பதைபதைத்தாள். பொறியை வலப் புறமாகச் சுழற்றவும் தவறிள்ை. அது இடப்புறமாகச் சுழன்று ஒரு சுடுகாட்டில் இறங்கிக் கால்குவித்து நின்றது. சுடுகாட்டில் தோன்றிய சீவகன் இரவுப் பொழுதில் அச் சுடுகாட்டை அடைந்த விசயை சிறிது நேரத்தில் ஆண்மகவொன்றைக் கருவு யிர்த்தாள். அச் சமயத்தில் இறந்துபோன தன் மகனை ஆங்கு அடக்கம் செய்ய வந்த கந்துக்கடன் என்னும் வணிகன் அக் குழந்தையை எடுத்துச் சென்று சீவகன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அச் சீவகன், அச்சணந்தி என்னும் கலைவல்ல ஆசிரியன்பால் எல் லாக் கலைகளையும் கற்றுணர்ந்தான். அவன் சிறந்த வீர கைவும் உயர்ந்த அறிஞனுகவும் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கின்ை. அவனைப் பெற்ற அரசியாகிய விசயை தெய்வமொன்றின் துணையால் தண்டகவனம் அடைந்து தவப்பள்ளியொன்றில் தன் மகன் நல் வாழ்வு குறித்துத் தவங்கிடந்தாள். சீவகனும் கோவிந்தராசனும் சீவகன் காளைப்பருவமுற்ற நாளையில் ஆசிரியல்ை தன் பிறப்பு வரலாற்றை உணர்ந்தான். அவன் பணித்த வண்ணம் குறித்த காலம் வருமளவும் தான்