பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. அமைச்சர் அருண்மொழித்தேவர் பெரிய புராணத்தின் பெருமை திருத்தக்க தேவரின் தீந்தமிழ்ப் படைப்பாகிய சிந்தாமணிக் காவியம் தோன்றியதற்குப் பின்னரும், கவியரசராகிய கம்பரின் கன்னித்தமிழ்ப் படைப்பாகிய இராம காவியம் எழுவதற்கு முன்னரும், இடைப்பட்ட காலத்தில் தோன்றிய இனியதொரு காவியம் திருத் தொண்டர் புராணம். தமிழில் தோன்றிய புராண நூல் கள் அனைத்தினும் பெருமை வாய்ந்தது திருத்தொண் ட்ர் புராணமாதலின் கற்ருேர் அதனைப் பெரிய புராணம் என்றே பேணிப் போற்றுவாராயினர். பிற புராணங்க ளெல்லாம் பெரும்பாலும் இல்லது புனையும் பெற்றி யுடையனவாகவும் பெரிய புராணம் உண்மை வரலாற் றைத் திண்மையுறத் தெரிவிக்கும் அரிய நூலாக விளங்குகின்றது. இந்நூலைப் பாடுதற்கு இறைவனே அடியெடுத்துக் கொடுத்தமையால் நூல் முழுதும் தெய்வ மணக்கும் செய்யுட்களாகத் திகழ்கின்றன என்று வியந்து போற்றினர் பெருந்தமிழ்ப் புலவராகிய மகாவித்துவான்.மீனுட்சி சுந்தரம் பிள்ளை. பெரியபுராண அமைப்பு சைவ சமய குரவருள் ஒருவராகிய சுந்தரரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்ற பெரிய புராண மாகிய அரிய காவியத்தில் செயற்கரிய செயல்களைச் செய்து சிவனருள் பெற்ற பெருமக்கள் அறுபத்து மூவரின் அருள் நிறைந்த வரலாறுகள் கிளைக் கதைக ளாக இணைக்கப் பெற்றுள்ளன. பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பசுந்தமிழால் பாடப்பெற்ற இந்