பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இலக்கிய அமைச்சர்கள் சேக்கிழார் சுவாமிகள் புராணம் என்னும் பெயரால் ஆக்கித் தந்துள்ளார். உமாபதி சிவனர் பதின்ைகாம் நூற்ருண்டில் வாழ்ந்த பைந்தமிழ்ச் சைவசித்தாந்தப் பேரறிஞர். இவர் சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினுன் கனுள் எட்டு நூல்களை இயற்றியவர். இவர் சங்கற்ப நிராகரணம் என்னும் தமது நூலை இயற்றிய காலம் சாலிவாகன சகாப்தம் கஉங்டு என்று குறித்துள்ளார். அது கி. பி. 1813 ஆகும். சேக்கிழார் பெரியபுராணம் இயற்றிய காலம் இரண்டாம் குலோத்துங்கன் கால மாகிய பதினேராம் நூற்ருண்டின் இறுதி என்று சரித ஆசிரியர்கள் கணித்துள்ளனர். ஆகவே, சேக்கிழார் காலத்திற்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்குப் பிற் பட்டவர் உமாபதிசிவனர் என்று கொள்ளலாம். அவர் இயற்றிய சேக்கிழார் புராணம் உண்மையான வரலா றென்று ஒப்புக்கொள்ளுதற்கு இடமுண்டு. அதனை வலியுறுத்தும் கல்வெட்டுச் சான்றுகளும் பலவுள. ஆதலின் உமாபதி சிவனர் உரைக்கும் சேக்கிழார் வரலாற்றை நோக்குவோம். சேக்கிழார் புராணம் செப்புவது சான்ருேர் உடைத்து என்று ஆன்ருேரால் போற்றப் பெற்ற தொண்டைநாடு பண்டை நாளில் இருபத்து நான்கு கோட்டங்களைக் கொண்டு விளங் கிற்று. அவற்றுள் புலியூர்க் கோட்டம் என்பதொன்று. அதன் உட்பகுதியாகக் குன்றைவளநாடு குலவிற்று. அப்பகுதியில் நிலவிய ஊரே குன்றத்துார் என்பது. இவ்வூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர் மரபில் தோன்றியவரே அருண்மொழித்தேவர் என்னும் அமைச்சர் ஆவர்.