பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இலக்கிய அமைச்சர்கள்

4 இலக்கிய அமைச்சர்கள் ஆவர். இந்த உண்மையைப் பண்டே கண்ட தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் பொன்னனைய பாடல்.ஒன்ருல் புலப்படுத்தின்ை. 'கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின் ஊறின் முகி ஆறினிது ப்டுமே; உய்த்தல் தேற்ரு யிைன் வைகலும் பகைக்கூழ் அள்ளல் பட்டு மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.” உருளையையும் பாரையும் கோத்து உலகில் செலுத்தும் காவலாகிய வண்டியைச் செலுத்துவோன் வல்லவகை இருத்தல் வேண்டும். அங்ங்னம் இருந் தால் வண்டி ஊறுபாடு இன்றி வழியை நன்ருகக் கடந்து செல்லும். அவன் அவ்வண்டியைச் செலுத் தும் வகையை அறியாவிட்டால் அது நாள்தோறும் பகையாகிய சேற்றிலே அழுந்திப் பெருந்துயரை விளக்கும். இவ்வாறு கூறிய தொண்டைமான் இளந் திரையன், அரசனை வண்டியைச் செலுத்துவோகைக் கொண்டான். அரசன் நாடாட்சியாகிய வண்டியைச் செலுத்தினுல் அதனை இழுத்துச் செல்லும் காளைகள் அமைச்சர்களேயாவர். ஆகவே அரசன் அமைச்சர் துணையின்றி நாட்டை ஆளுதல் என்பது இயலாத தொன்றே. அரசியல் அங்கங்கள் அரசனுக்குரிய அங்கங்கள் ஆறு என்று வகுத்துக் கூறினர் வள்ளுவர். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.