பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இலக்கிய அமைச்சர்கள் அமைச்சர் சிவகதை விளக்குதல் அரசின் விருப்புடன் கேட்கும் சிறப்பை அறிந்த அமைச்சராகிய அருண்மொழித்தேவர், “அரசே! அம் பலக்கூத்தன் அடியார் பெருமையை அப்பெருமானே அடியெடுத்துக் கொடுக்கச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிைெரு திருப்பாட்டுக்களையுடைய திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை அருளியுள்ளார். அப்பதிகத் திற்குத் திருநாரையூரில் எழுந்தருளிய பொல்லாப் பிள்ளையார் பொருள்விரித்தருளினர். அதைக் கேட்ட நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியுள்ளார். அதனைத் திருமுறைகண்ட சோழனுகிய இராசராசதேவன் முதலாகப் பலரும் பாராட்டியுள் ளனர். அவற்ருல் விரிக்கப்பெறும் திருத்தொண்டர் வரலாறுகளே இருமைக்கும் உறுதி விளைக்கும் உயர் வுடையன," என்று விளக்கமாக உரைத்தருளினர். * அத்தகைய அடியார்களின் அருள் வரலாற்றை முறை யாக எடுத்து இயம்புக' என்று அரசன் அமைச்சரை வேண்டினன். அருண்மொழித்தேவரும் அடியார்களின் வரலாற்றை விரித்துரைத்தார். அமைச்சர் காவியம் அமைத்தல் அமைச்சர் கூறிய அருள் வரலாறுகளைக் கேட்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய அநபாயன், "உலகம் உய்யுமாறு இவ்வரலாறுகளைப் பெருங்காவியமாக அமைத்துத் தருவீர்," என்று வேண்டினன். அவருக்கு வேண்டும் பொருள்களையெல்லாம் கொடுத்துத் தில்லை யில் சென்று தங்குமாறு செய்தான். தில்லை வந் தடைந்த அமைச்சர் திருக்கோவிலை அடைந்து கூத்தப் பெருமான் குரைகழலைப் பணிந்தார். அடிகளே !