பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இலக்கிய அமைச்சர்கள் எண்டிசையோரும் திரண்டு வருக! அடியவர்கள் எல்லோரும் கடுகி வருக!' என்று ஆட்களையும் ஒலை களையும் அனுப்பினன். தில்லையில் சிவனடியார் திருக் கூட்டம் பெருங்கடல்போலத் திரண்டது. எங்கும் வேதியர் வேதமுழக்கும் மூவர் தேவாரத் திருமுழக்கும் சிவநாமப் பெருமுழக்கும் இடிமுழக்கைப்போல முழங்கிக் கொண்டிருந்தன. சித்திரைத் திங்கள் திருவாதிரை நாளில் திருக்தொண்டர் புராணத்தை அருண்மொழித் தேவர் அரங்கேற்றத் தொடங்கினர். எதிராண்டு சித் திரைத் திருவாதிரையில் அரங்கேற்றம் நிறைவேறிற்று. தில்லையில் சேக்கிழார் பவனி திருத்தொண்டர் புராண அரங்கேற்றம் முடிந் ததும் அந்நூலை மன்னன் பொற்பேழையில் வைத் தான். தில்லைவாழ் அந்தணர்கள் அதனைச் சிவமூல மந்திரத்தால் அருச்சனை செய்தனர். இன்று முதல் இதுவும் ஒரு தமிழ்வேதம் என்று மன்னன் பாராட்டி ன்ை. அப் பொற்பேழையினை அரசன் தனது பட்ட வர்த்தனக் களிற்றின்மேல் ஏற்றின்ை. புராணம் பாடிய அமைச்சராகிய அருண்மொழித்தேவரையும் அவ் யானையின் மீது அமரச் செய்து, தான் அவருக்குப் பின்னல் அமர்ந்து இரு கரங்களாலும் அமைச்சருக்கு வெண்கவரி வீசினன். தில்லிைத் திருவீதிகளில் வலமாக வந்தான். இதுவன்ருே நான் செய்த நற்றவத்தின் பயனுகும், என்று சொல்லி இன்புற்ருன். மக்கள் பாராட்டு மன்னன் கவரி வீச, மதயானையின்மீது இவர்ந்து வரும் மதியமைச்சராகிய அருண்மொழித்தேவரைக்