பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் அமைச்சர்கள்

5

இலக்கியத்தில் அமைச்சர்கள் 5

படைகுடி கூழ் அமைச்சு கட்(பு)அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.' என்பது வள்ளுவர் வாய்மொழி. இவ் உறுப்புக்கள் ஆறனுள்ளும் முதன்மையான இடம் அமைச்சுக்கே கொடுத்துள்ளார். அமைச்சரின் சிறப்பையும் பொறுப் பையும் விளக்குதற்குப் பத்து அதிகாரங்கள் வகுத்துள் ளார். பண்டைத் தமிழ் மன்னர்கள் தம் அரசியலைப் பொறுப்புடனும் சிறப்புடனும் நடத்துதற்கு ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்னும் இரண்டு ஆட்சிப் பேர வைகளை அமைத்திருந்தனர் என்று பழந்தமிழ் இலக்கி யங்களால் அறியலாம். அமைச்சர், புரோகிதர், படைத் தலைவர், தூதுவர், சாரணர் என்ற ஐவருமே ஐம் பெருங் குழுவினர் ஆவர். கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகர மாந் தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் என் னும் எண்மரும் எண்பேராயத்தார் எனப்படுவர். இவ் இரண்டு ஆட்சிப் பேரவை உறுப்பினருள்ளும் தலை மைச் சிறப்புடையார் அமைச்சர்களே. பழமொழி நூலில் அமைச்சர் பழமொழி நூலை வழங்கிய முன்றுறை அரையனுர் என்னும் அரசப் புலவர் ஒருவர் தம் நூலில் அமைச் சரை அன்புடைய தாயர்க்கு ஒப்பிட்டுரைத்தார். கோபத் தால் தாயுடன் சண்டையிட்டுக் கொண்டு பாலுண்ணுத குழந்தையை அத் தாய் அடித்தேனும் பாலுண்ணுமாறு செய்வாள். அவ்வாறு அவள் செய்வது குழந்தையின் நலத்தைக் கருதியே யன்ருே அஃதேபோல் அமைச் சர் கூறும் நல்லறத்தை ஏற்றுக்கொள்ளாத பொல்லாத