பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் அமைச்சர்கள்

7

இலக்கியத்தில் அமைச்சர்கள் 7

காது நின்று அங்குசத்தால் வெருட்டி அடக்குதல் போல மன்னன் மயக்கத்தால் வெகுண்டாலும் அமைச் சன் விலகாது நின்று அவன் செவி சுடுமாறு சீரிய உண்மைகளை நேரிய முறையில் கூறி அறிவு கொளுத்த வேண்டும் என்று குறித்தார் குமர குருபரர். இங்ங்னம் தமிழ் இலக்கியங்கள் பலவற்றினும் அமைச்சர் இயல்புகளைப் பரக்கக் காணலாம். அரசன் வரலாறு கூறும் இலக்கியம் அனைத்தினும் அமைச்ச ரைப் பற்றிய செய்திகளும் இடம்பெற்றே இருக்கும். அம்முறையில் தமிழ் இலக்கியங்களில் காணும் அமைச் சர்கள் சிலரைப் பற்றிய செய்திகளை இந்நூலில் ஆராய்ந்து அறிவோம்.