பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இலக்கிய அமைச்சர்கள் குடிகளை வருத்திப் பொருள் குவிப்பானுயின் அது விரைந்து அழிந்துபோம். அழக்கொண்ட எல்லாம் அழப்போம் ' என்பார் வள்ளுவர். அமைச்சன் தீய வழிகளில் பொருளை ஈட்டி அரசனுக்குச் சேர்த்து வைத் தால் அது பச்சை மட்பாண்டத்தில் நீரை ஊற்றிக் காத்த செயலோடு ஒப்பாகும் என்ருர் அவ் ஒப்பில் புலவர். " சலத்தால் பொருள் செய்(து) ஏமார்த்தல் பசுமண் கலத்துள்ர்ே பெய்திரீஇ யற்று.' என்பது அவர் வாய்மொழியாகும். அரசனது வினைத்திட்பம் அரசியலில் தூயவினையைத் தொடங்கிச் செய்யப் புகும் அமைச்சனுக்கு மனவுறுதிவேண்டும். வினைத் திட்பம் என்பது மனத்திட்பமே என்பார் வள்ளுவர். துணிவுடன் செய்யும் வினையை முடிவில் பிறர் அறியு மாறு முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே மனத் திட்பமாகும். அவ்வாறின்றி அச்செயல் இடையே வெளிப்படுமாயின் அது நீங்காத துன்பத்தைத் தரும். மனத்திட்பமுடைய மதியமைச்சனே, தான் அடைய எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் எண்ணிய வாறே பெற இயலும். அமைச்சன் எண்ணித் துணிந்த செயலைக் காலத் தாழ்வின்றி விரைந்தாற்றவேண்டும். நீட்டித்துச் செய்யத் தக்க வினைகளை நீட்டிக்கலாம். நீட்டியாது செய்யும் வினைகளை விரைந்து முடிக்கவேண்டும். அமைச்சன் தான் செய்கின்ற வினையால் அதைப் போன்ற பிறிதொரு வினையையும் முடித்துக் கொள்ள வேண்டும்.