பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கண்ட நல்லமைச்சர் 15 அமைச்சன் தூதுப்பணி இத்தகைய திறமெல்லாம் படைத்த அமைச்சன் மற்ருெரு மன்னன்பால் தூது செல்லும் வாய்ப்பும் ஏற்படும். அங்ங்னம் செல்லுங்கால் தன் நாட்டு மன்னனுக்கு இழிவும் கேடும் ஏற்படாதவாறு வகுத்துக் கூறும் தலையாய தூதனுக விளங்கவேண்டும். வேற் றரசரிடம் தான் அவரைக் காணும்முறையும் பேசும் முறையும் முன்பே ஆராய்ந்து கொள்ளவேண்டும். தன் சொல்லை அவர் ஏற்றுக்கொள்ளும் செவ்வி யறிந்து சொல்லவேண்டும். தான் சென்ற கருமத்தைச் சொல்லு தற்கு ஏற்ற இடமறிந்து இயம்பவேண்டும். அவ்வாறு சொல்ல வல்லவனே துதரில் தலைமையானவன் என்பார் வள்ளுவர். கடனறிந்து காலம் கருதி இடனறிக்(து) எண்ணி யுரைப்பான் தலே.' என்பது அவர் வாய்மொழி. மன்னரைச் சார்ந்தொழுகும் திறம் மன்னர்க்கு உறுதி உரைக்கும் அமைச்சன் அவரைச் சேர்ந்தொழுகும் திறத்தையும் ஆய்ந்து அறிந்து பழகவேண்டும். நெருப்பை வளர்த்துக் குளிர்காய்பவரைப் போல அரசியல் பொறுப்புடைய அமைச்சன், அரசனை அகலாதும் அணுகாதும் தகவுறப் பழகவேண்டும். தன்னைப் பேணும் மன்னன் விழையும் பொருள்களை அமைச்சன் விழையாதொழி தலே பெருமையை விளைப்பதாகும். மன்னன் தன்னைச் சிறிதும் ஐயுருதவாறு அமைச்சன் நடந்து கொள் ளுதலே நலம் பயப்பதாகும். மன்னன் அருகிருக்கும் போது அவன் காணப் பிறர் செவிக்கண் மறை பேசு