பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இலக்கிய அமைச்சர்கள் தலும் ஒருவன் முகம் நோக்கி நகுதலும் அமைச்சனுக்கு ஆகாதனவாகும். மன்னன் பிறருடன் மறை பேசுங் கால் மதியமைச்சன் அதனை உற்றுக்கேட்டலோ பற்றி வினவலோ தகாது. அவன் குறிப்பறிந்து, காலம் தெரிந்து, வெறுப்பில்லாதனவும் வேண்டுவனவுமாகிய காரியங்களை விரும்புமாறு அமைச்சன் விளம்ப வேண்டும். அமைச்சன், மன்னனைத் தன்னினும் இளையவன் என்ருே, தனக்கு உறவினன் என்ருே இழிவாக எண்ணிவிடுதல் கூடாது. குறிப்பறியும் சிறப்பாற்றல் இவ்வாறு அரசனைச் சார்ந்து பழகும் அமைச்ச னுக்குக் குறிப்பறியும் ஆற்றல் வேண்டும். அரசன் குறித்த கருமத்தை அவன் கூருமலே அவன் முகத் தாலும் கண்ணுலும் நோக்கி அறியும் திறத்தை அமைச் சன் பெற்றிருக்கவேண்டும். அரசன்குறிப்பறிந்து செய லாற்றும் சீரிய அமைச்சன், தான் இருக்கும் அவையின் இயல்பையும் தெரிந்து காரியங்களைக் கூறவேண்டும். பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவுடையார் நிறைந்த அவைக்கண் அமைச்சன் அரசியற் செய்திகளை ஆராய்ந்து கூறவேண்டும். அங்ங்னம் கூறுதல் பசும்பயிர் வளர்ந்த பாத்தியுள் நீரைச் சொரிந்த பான் மைக்கு ஒப்பாகும் என்பார் வள்ளுவர். புல்லறிவாளர் கூடிய அவையில் அமைச்சன் நல்லறிவாளர்போற்றும் செய்திகளைச் சொன்னல் அங்கணத்துள் சிந்திய அமிழ்தம் போலாகும். அவையஞ்சா ஆற்றல் அவையறிந்து பேசும் அமைச்சனுக்கு அவைக்கு அஞ்சாத வல்லமையும் வாய்த்திருக்கவேண்டும்.