பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கம்பன் கண்ட அமைச்சர் கம்பனும் கவிதையும் தமிழ் இலக்கிய வானில் தனியொளி பெற்றுத் திகழ்பவன் கம்பன். அவனது அருந்தமிழ்ப் படைப் பாகிய இராமாயணம் ஒன்பான் சுவையும் ஒருங்கு மலிந்த உயர்ந்த கவியமுதமாகும். அதேைலயே கம்ப நாடன் கவிதையிற் போல் கற்ருேர்க்கு இதயம் களி யாதே' என்று கவிஞர் போற்றுவாராயினர். தயரதன் அமைச்சர்க்ள் இத்தகைய இராம கரவியத்தில் பேசப்பெறும் கோசல நாட்டுக் கொற்றவன் தயரதன் என்பான். அவனது அரசவையில் வீற்றிருந்த அமைச்சர்கள் அறுபதியிைரம் பேர்கள் ஆவர். அவர்கட்குத் தலைமை தாங்கிய முதலமைச்சன் சுமந்திரன் என்பான். இவ் அமைச்சர்களின் இயல்பைக் கம்பர் தமது காவியத்தில் விரித்துரைக்கின்ருர், அறிவும் திறமும் தயரதனுக்கு வாய்த்த அமைச்சர்கள் வழிவழியாக அமைச்சுரிமை தாங்கி வரும் பழங்குடியில் தோன்றிய பண்பினர். கலைகள் பல ஆய்ந்துணர்ந்த கல்வியறி. வும், கலை வல்லார் பலர் சொல்லக் கேட்ட கேள்வியறி வும், அவற்றின் பயனும் பெற்ற பேரறிவாளர். தங்கள் நலமும் செல்வமும் நலிந்தாலும் நடுவுநிலை பிறழாத பெற்றியர். தீவினை ஒழித்து நல்வினையே ஆற்றும் திருவுடையார்.