பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட அமைச்சர் 19 மதியும் மானமும் மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் என்பர் ஆன்ருேர், தயரதன் அமைச்சர்கள் நிகழ்ந்த தொரு செயலைக் கொண்டு மேல் நிகழப்போகும் செயலை அறியும் திறமுடையார். அரசனுக்கு ஊழ்வினை யால் தீங்கு விளைந்தத்ாயினும் அதனையும் மாற்றி யொழிக்கும் ஆற்றலுடையார். அவர்கள் பிறப்பி லேயே சிறப்புற்ற பெரியவர்கள். அரசியலைப் பற்றிய அ ரி ய நூல்களையெல்லாம் ஒதியுணர்ந்தவர்கள். மானத்தை உயிரினும் மாண்புடையதாகப் போற்றிக் காப்பவர்கள். உடம்பில் உள்ள உரோமத்தில் ஒன்றை இழப்பினும் உயிர் நீக்கும் கவரிமாவைப் போல் தம் பெருமைக்கு ஒரு சிறிது இழுக்கு நேர்ந்தாலும் அதனை உயிர் கொடுத்தேனும் காப்பார்கள். அறமும் அறிவும் அவர்கள் அரசியல் வினைகளை ஆற்றுதற்குரிய காலத்தையும் இடத்தையும் அவற்றிற்கு வேண்டும் கருவிகளையும் தம் நூலறிவும் நுண்ணறிவும் கொண்டு நுனித்து நோக்குவர். தெய்வத்தை வழிபட்டு மெய் வைத்த அறவினைகளையே ஆற்றுவர் ஒழுக்கத்தில் தவருத உத்தமராக ஒளிர்வர். தமக்கும் அரசனுக்கும் அபுகழைத் தரும் புனிதமான வினைகளையே புரிவர். அரச னுக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும் செயல்களையெல் லாம் நன்காய்ந்து செய்வர். உறுதியும் உரமும் அரசனுக்கு உறுதி பயக்கும் உண்மைகளை எடுத் துரைப்பதிலும் இடித்துரைப்பதிலும் அஞ்சாதவர் தய