பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட அமைச்சர் 21 நோயைப் போக்கும் நலம் பற்றியதே. ஆதலின் நோயாளன் மருத்துவரை வெறுத்துப் பழித்து இகழ்வ தில்லை. அங்ங்னம் சிகிச்சை செய்து குணப்படுத்திய மருத்துவரைப் பெரிதும் மதித்துத் தெய்வமெனக் கொண்டாடுவான். ' வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்.' என்று பாடினர் ஆழ்வார் ஒருவர். அத்தகைய மருத்துவரைப் போன்று அரசனுக்கு நல்லவும் தீயவும் நாடிச் சொல்லும் நன்னுேக்கினர் தயரதன் அமைச்சர் கள். அவர்கள் நாட்டிற்கோ அரசனுக்கோ திடீரென்று எதிர்பாராது எது நேர்ந்தாலும் இது முன்னை நல்வினை யென எண்ணி முந்தி வந்துதவும் சிந்தையாளர்கள். அவர்கள் அறுபதியிைரம் பேர்களாக இருந்தாலும் அரசனுக்கு உறுதியுரைப்பதில் ஒருவரைப் போன்று ஒற்றுமை உணர்ச்சியுடன் ஒளிர்வர். ஆதலின் தயரதன் பெற்ற அறிவுருவங்கள் அவ் அமைச்சர்கள் என்றே எண்ண வேண்டும். தயரதன் மந்திரப் பேரவை இத்தகைய அமைச்சர்கள் அறுபதியிைரம் பேர் களும் மந்திரப் பேரவை கூடும் வேளையில் மறிதிரைக் கடல் போல் வந்து மன்னனைச் சூழ்ந்து அமர்ந்திருப் பர். தயரதன் தன் அரசவையில் நோக்கும் திசையெல் லாம் நுண்ணறிவுடைய அமைச்சரையே கண்டு களிப் பான். அரசன் கருத்தை அறிவித்தல் ஒருநாள் தயரதன் தனது மந்திரப் பேரவையினைக் கூட்டின்ை. அங்கு வந்தமர்ந்த அமைச்சர்களிடம்