பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இலக்கிய அமைச்சர்கள் விழுந்து இறந்ததற்கு அவன் குற்றவாளியல்லன் ; மேலும் படைகள் புடைசூழச் செல்லும் அவன் நெடுந் தேரில் இருந்தவாறு துள்ளிவரும் கன்றைக் கண் டிருக்க முடியாது ; அவன் செல்லும் வீதியோ மாடு மேயும் வீதியன்று; மன்னன் உலா வரும் மாட வீதி அது; அவ்வீதிக்குள் கன்று புகுந்ததும் அதனை உரியவர் அவிழ்த்து விட்டதும் பெருங்குற்றம்; பயமறி யாத இளங்கன்றைப் பற்றிக் கட்டி வைத்திருத்தலே உரியவர் கடமை ; அதனை உணராது அரச வீதியில் புகுமாறு அவிழ்த்துவிட்ட செயல் கன்றுக்கு உரிய வரின் பெரிய குற்றமாகும்; ஆதலின் இக்குற்றத்திற்கு அரசகுமாரன் அணுவளவும் பாத்திரமாகான் என்னும் உண்மையை மன்னன் தெரியவேண்டும் என்பதற்காக அவ் அமைச்சன் திறம்பட உரைத்தான். மனுவேந்தன் துயரம் அமைச்சன் கூறிய மொழியைக் கேட்டு மனு வேந்தன் பசு அடைந்த துயரத்தைப் போன்று தானும் துயருற்ருன். வெவ்விடம் தலைக்கேறியது போல் உள்ளத்தில் வேதனைப்பட்டான். என்னுடைய ஆட்சி மிக நன்ருக இருக்கிறது ! என்று சொல்லி மனம் சுழன் ருன். இப்பசுவின் துயரைப் போக்க யாது செய்வது? என்று எண்ணியெண்ணி ஏங்கின்ை. அந் நிலையில் அரசின் அடைந்த துயரத்திற்கு ஓர் அளவே இல்லை. அமைச்சர் உரையும் அரசன் முறையும் மன்னன். படும் இன்னலைக் கண்ட மந்திரிகள் அவன் மலரடி வணங்கி, அரசே! தாம் மனம் தளர்ந்து வாடுவது இதற்குத் தீர்வாகாது. பசுவைக்