பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுவேந்தன் மதியமைச்சர் 31 தன் குலமகளுகவும் தனிமகளுகவும் இருந்தாலும் அவனும் தக்க தண்டனையை அடைந்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் உயர்ந்த அரசு நெறியை நடத்தின்ை. மனுவேந்தன் ஆட்சி மாண்பு இவ்வாறு அருஞ்செயல் புரிந்த அரசன் மாட் சியைப் புலவரெல்லாரும் வியந்து போற்றினர். தெய்வப்புலமைச் சேக்கிழார் பெருமான் அவனது ஆட்சியை அரிதோ? எளிதோ? என்று வியந்து போற்றி வினவியருளினர். 'ஒருமைந்தன் தன்குலத்துக் (கு) உள்ளான்என் பதும் உணரான் தருமம்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைங்தன் மருமம்தன் தேராழி உறஊர்ந்தான் மனுவேங்தன் அருமந்த அரசாட்சி அரிதோ மற்(று) எளிதோதான் ! என்பது சேக்கிழார் வாக்கு. சிவஞான முனிவர் பாராட்டு கொல்லாமை என்னும் நல்லறத்தின் மாண்பைச் சொல்ல வந்த வள்ளுவர் பெருமான், பிறிதோர் இனிய உயிரை அதன் உடம்பினின்றும் நீக்கும் தொழிலைச் செய்யாதவிடத்துத், தன்னுயிர் நீங்கிப் போமாயினும் அக்கொடுந் தொழிலைச் செய்யாதொழிக, என்று வலியுறுத்தினர். இவ் உண்மையை விளக்கப் போந்த சிவஞான முனிவர், மன்னன் ஆணைப்படி மைந்தன் உயிரைத் தேர்க்காலில் கிடத்தி மாய்க்க